இளையராஜாவோட உண்மை கதையை அப்படியே எடுத்தா அவ்வளவுதான்!.. பகீர் கிளப்பும் பிரபலம்!..

"இசைஞானி" இளையராஜா வாழ்க்கையை குறிக்கும் விதமான பயோ-பிக்கிற்கு 'இளையராஜா' என்றே பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அருள் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகப்போகும் இப்படம் "துதி" பாடும் விதாமாக இருக்குமா? அல்லது உண்மைகளை அப்படியே சொல்லுமா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

தனுஷ் நடிக்க சம்மதித்து இளையராஜாவே இசையமைக்க முடிவு செய்யப்பட்டு படத்தின் அடுத்தகட்ட நகர்வுகளை யோசிக்க துவங்கியுள்ளது படக்குழு. இது போன்ற ஆசை ஒரு காலத்தில் ரஜினிக்கு ஏற்படவே எஸ்.ராமகிருஷ்னனை அழைத்து பேசியிருக்கிறார். சில நாட்களிலேயே சலிப்பு தட்டி விடவே அந்த ஆசையை கைவிட்டார் ரஜினி.

இதையும் படிங்க: காரில் போகும்போது இளையராஜா என்ன பாடல் கேட்பார்?!. சீக்ரெட் சொல்லும் இயக்குனர்!..

அதற்கு அவர் சொல்லிய காரணம்தான் முக்கியம். அதாவது தனது வாழ்க்கை குறிப்பை படமாக்கும் பொழுது பல உண்மைகளையும் சொல்ல வேண்டிய நிலை வரும். பாஸிட்டிவ் பக்கத்தை மட்டுமே வைத்தால் அது "துதி" பாடும் படமாகிவிடும் என்று நினைத்து "ஜகா" வாங்கினார். இப்படி இருக்கையில் இளையராஜாவிற்கு இப்படி ஒரு ஆசை வந்துவிடவே படம் தயாரிக்கப்பட்டும் வருகிறதாம்.

இசையமைப்பாளரும், நடிகருமான "ஹிப் ஹாப் தமிழா" ஆதி இது போல் தனது வாழ்க்கை குறித்த படம் எடுத்து வெளியிட்டது நமக்கு தெரிந்ததுதான். அந்த படத்தில் அவரது முதல் பாடல் வெளிவருவது வரையிலான விஷயங்களை மட்டுமே காட்டியிருந்தார். மேலும் அடுத்த பாகத்தில் மீதி உள்ளவை குறித்த காட்சிகள் அமைக்கப்படலாம் என்றும் நினைக்க வைத்துள்ளது.

பலராலும் கோபக்காராக பார்க்கப்படும் இளையராஜா படத்திலும் அப்படியே காண்பிக்க படுவாரா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள அந்தனண். ஒருமுறை இளையராஜாவின் பிறந்த நாள் அந்த பார்ட்டி கொண்டாடும் போது தாமதமாக ரஜினி வர காரணம் கேட்டு சமாதானமடையாத பாரதிராஜா கோவத்தில் ரஜினியை பளார்ன்னு அடிச்ச உண்மையெல்லாம் படத்தில் சேர்த்தால் படத்தின் விறுவிறுப்பு கூடும்.. ஆனால் அதை எல்லாம் வைப்பார்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளார் அந்தனண்.

இதையும் படிங்க: இளையராஜாவை முதன் முதலா பிளைட்ல அழைச்சிட்டு போனதே நான்தான்!.. யாருப்பா அவரு?..

பட விழாவில் பேசிய கமல்ஹாசன் இளையராஜாவை பிடித்தவர்களுக்கு படம் ஒரு விதமாகவும், பிடிக்காதவர்களுக்கு வேறு ஒரு விதமாகவும் அமையும் என ஆருடம் சொல்லியிருந்தார். ஆரம்பத்தில் தனுஷ் மாரி செல்வராஜை வைத்து படத்தை இயக்கலாம் என நினைத்து இளையராஜாவை சந்திக்க நேரம் கேட்டபோது, அவர் இயக்கினால் இது ஒரு சார்பான படமாக மாறிவிடும் எனக்கூறி சந்திப்பை இளையராஜா தவிர்த்தாக அந்தனண் கூறினார்..

தனுஷை தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை சிறப்பிக்க முடியாது என உறுதியாகச்சொல்லி சான்றும் வேறு வழங்கியிருக்கிறார் அந்தணன். இளையராஜாவை கடவுளாக பாவித்து வரும் தனுஷோ இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்த வரம் என்றும் பேசி வருவதாகவும் அந்தனண் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அப்பாவுக்கே அல்வா கொடுத்த தனுஷ்!. இளையராஜா பயோபிக்கில் பல்பு வாங்கிய கஸ்தூரி ராஜா!..

 

Related Articles

Next Story