எஸ்பிபியோட வாய்ப்பை பறித்த இசைஞானி… பின்ன கையில இவ்ளோ வித்தை வச்சிருந்தா சும்மாவா…

இளையராஜா தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் 70-களில் தொடங்கி இன்று வரை திரைப்பட பாடல்களுக்கு இசையமைத்தும் சில படங்களில் பாடல்களை பாடியும் வருகிறார். இவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

குழந்தை முதல் பெரியவர்கள் மற்றும் இக்கால இளைஞர்கள் என அனைவரும் ரசிக்கும் வகையில் இவரின் பாடல்கள் இருக்கும். இந்த காரணங்களால் இவரை இசைஞானி என அழைக்கின்றனர். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.பின் 16 வயதினிலே, ஆறிலிருந்து அறுபது வரை போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தில் தனது சொந்த குரலில் பாடியும் இசையமைத்தும் உள்ளார்.

இதையும் படிங்க:இளையராஜா நல்லா இல்லனு சொன்னால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்… இது என்னப்பா புது உருட்டா இருக்கு!

1984 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர்ஜன் இயக்கத்தில் வெளியான படம்தான் பூவிலங்கு. இத்திரைப்படத்தில் முரளி கதாநாயகனாக அறிமுகமானார் மற்றும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக குயிலி நடித்திருந்தார். இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியும் அதற்கு இளையராஜா இசையமைத்தும் உள்ளார். இப்படத்தில் வரும் ஒரு பாடல்தான் ஆத்தாடி பாவாட காத்தாட என்ற பாடல்.

இப்பாடலில் கதாநயகன் கதாநாயகியை காண வருகிறார். அப்போது அங்கு குயிலி குளித்து கொண்டிருக்க கதாநாயகனுக்கு அது இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. ஆனால் குயிலுக்கோ எங்கு யாராவது பார்த்தால் என்ன ஆகும் என்கிற பயம் ஏற்படுகிறது. ஆனால் குயிலியை பேசி சம்மதிக்க வைத்து உடன் அழைத்து செல்வதுதான் இப்பாடல்.

இதையும் படிங்க: இவரெல்லாம் எப்படித்தான் பொறந்தாரோ!… இளையராஜா பற்றி மாரிமுத்து ஃபீலிங் காட்டிய தருணம்…

இந்த உணர்வுகளை பாடல் வரிகளிலும் மற்றும் இசையிலும் கொண்டு வர வேண்டும். அதை வைரமுத்துவும் இசைஞானியும் மிக அழகாக செய்துள்ளனர். இப்பாடலில் முதலில் பாடவிருந்தது எஸ்.பி.பிதானாம். ஆனால் இசைஞானி இப்பாடலுக்கு ட்ராக் மட்டும் பாடிக் கொடுத்துள்ளார். ஆனால் இசைஞானியின் குரலை கேட்ட இயக்குனர் அவரின் குரலே இதற்கு பொருத்தமாக உணர்ச்சிபூர்வமாகவும் உள்ளது எனவும் எனவே இப்பாடலை இளையராஜாவை பாடி தரும்படியும் கேட்டுள்ளார்.

இளையராஜாவின் குரலில் வெளியான ஆத்தாடி பாவாட காத்தாட…காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட… காத்தாட நெஞ்சு கூத்தாட… பாடல் மிக பெரிய வெற்றியையும் கண்டது. மேலும் இப்பாடலில் இளையராஜா புல்லாங்குழலில் மிக அழகாக இசையமைத்திருப்பார். மேலும் ஷனாய் போன்ற இசைகருவிகளை சோக கீதங்களுக்கு பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இப்பாடலில் இதனை சந்தோஷமான நிகழ்வுக்கு பயன்படுத்தியிருப்பது அக்கால மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: வாய் ஓவரா தான்… ஆனா இந்த விஷயத்துல இளையராஜாவ அடிச்சிக்கவே முடியாது…

 

Related Articles

Next Story