இளையராஜா நேரில் பார்க்க ஆசைப்பட்ட ஒரே சினிமா பிரபலம் இவர்தான்!.. ஆனா நடந்ததே வேற...

by சிவா |
ilayaraja
X

layaraja: 80களில் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருந்தவர் இளையராஜா. மதுரையிலில் தனது சகோதரர்களுடன் இணைந்து இசைக்கச்சேரிகளை நடத்தி கொண்டிருந்தார். சினிமா பாடலாக இல்லாமல் சொந்தமாக டியூன் போடுவார் இளையராஜா. அதற்கு அவரின் தம்பி கங்கை அமரன் பாடல்களை எழுதுவார்.

பல கம்யூனிச மேடைகளில் கச்சேரிகளை நடத்தி கொண்டிருந்தார். 60களின் இறுதியில் சென்னை வந்த இளையராஜா சிலரிடம் முறையாக இசையும் கற்றுக்கொண்டார். இசை தொடார்பான படிப்புகளையும் படித்தார். அதபின் ஜிகே வெங்கடேஷ் உள்ளிட்ட சிலரிடம் உதவியாளராக வேலை செய்தார்.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு பாட்டா?!.. இளையராஜாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய இயக்குனர்!..

அதன்பின் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டார். அப்போது எம்.எஸ்.விஸ்வநாதன் நிறைய படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் சிறுவனாக இருக்கும்போது எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்தான் இளையராஜா.

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கினார். அப்படி அவர் இசையமைத்த முதல் படத்தின் பாடல்களே பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதன்பின் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது.

msv

கிட்டத்தட்ட பெரும்பாலான இயக்குனர்கள் இளையராஜா பக்கம் வந்துவிட்டனர். 80களில் வெளியான 90 சதவீத தமிழ் படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். பல இனிமையான பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவருக்கு இசைஞானி என்கிற பட்டமும் கிடைத்தது.

இப்போதும் இளையராஜாவை ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என்கிற ஆசை அவரின் ரசிகர்கள் பலருக்கும் இருக்கிறது. ஆனால், ‘நீங்கள் நேரில் போய் பார்க்க ஆசைப்பட்ட பிரபலம் யார்?’ என இளையராஜாவிடம் ஒரு கல்லூரி மாணவி கேட்க அதற்கு பதில் சொன்ன ராஜா ‘எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்க ஆசைப்பட்டு அவருக்கு கடிதம் எல்லாம் அனுப்பினேன். அவரின் வீட்டின் முன்பு போய் நின்றேன். அவர் எங்கோ கிளம்பி கொண்டிருந்தார். என்னை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு காரில் ஏறி சென்று விட்டார். இதுதான் நடந்தது’ என சிரித்துக்கொண்டே சொன்னார் இளையராஜா.

இதையும் படிங்க: தளபதிக்குப் பிறகு இளையராஜாவுடன் இணையாத மணிரத்னம… அவரே சொன்ன காரணம்..!

Next Story