Cinema News
இளையராஜா பயோபிக்!.. இசைஞானி எடுத்த முக்கிய முடிவு!.. அட இது நல்லா இருக்கே!..
70களின் பாதியில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்தவர் இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் இசையமைக்க துவங்கிய அவர் சுமார் 20 வருடங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்தார். படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கிய காரணமாக அமைந்தது.
இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் பாடல்கள் வெளிவந்தது. இடைவெளி விடாமல் ரசிக்க வைக்கும் பாடல்களை போட்டு பிரம்மிக்க வைத்தார். ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், மோகன் என 80, 90களில் கோலிவுட்டை கலக்கிய பல நடிகர்களின் படங்களுக்கும் இளையராஜாவின் பாடல்கள் முதுகெலும்பாக இருந்ந்தது.
இதையும் படிங்க: சுசித்ரா சொல்றது எல்லாம் உண்மையா? தனுஷ் ஏன் மாயமானார்? பிரபலம் சொல்வது என்ன?
அதேநேரம், இளையராஜா நுனி மூக்கு கோபம் கொண்டவர். சின்ன விஷயம் என்றாலும் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் கோபத்தையே அப்படியே காட்டி விடுவார். அப்படி பலமுறை இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் கோபத்தை காட்டி இருக்கிறார். ஆனால், படத்தின் வெற்றிக்கு அவரின் இசை தேவை என்பதால் எல்லோரும் அவரை பொறுத்துகொண்டார்கள்.
ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், தினா, எஸ்.ஏ.ராஜ்குமார் என 90களில் பல புதிய இசையமைப்பாளர்கள் வந்தனர். இதனால் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவர்கள் பக்கம் போய்விட்டனர். எனவே, இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை சொற்பமாக குறைந்து போனது.
இதையும் படிங்க: மணிரத்னம் படம்.. ஜோடி ஸ்ரீதேவி.. வாய்ப்பை தவறவிட்ட ராமராஜன்… மனுஷன் இப்படியா இருப்பாரு!..
இந்நிலையில்தான், அவரின் சொந்த வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. அதில் தனுஷ் ஹீரோவாக நடிப்பதாகவும், கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெரியவில்லை.
இந்நிலையில், கரண்ட் டிரெண்டுக்கு இளையராஜாவின் இசை செட் ஆகுமா என்பது தெரியவில்லை. எனவே, இயக்குனரிடம் 80களில் தான் இசையமைத்த பாடல்களையும், பல படங்களில் அவர் போட்ட பின்னணி இசையையுமே அப்படியே இந்த படத்தில் பயன்படுத்த சொல்லிவிட்டாராம் இளையராஜா. அதாவது தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் படத்திற்காக ராஜா புதிதாக எந்த பாடலையும் போடப்போவதில்லை என செய்திகள் வெளிவந்திருக்கிறது.