Connect with us
angadi

Cinema News

‘அங்காடித்தெரு’ படத்தில் ஒரு காமக் கொடூரக் கதாபாத்திரம்! உண்மையிலேயே மனுஷன் அப்படித்தான் போல

2010 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் அங்காடித்தெரு. இந்தப் படத்தில்  புதுமுக ஹீரோ மகேஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்திருப்பார். கருணாமூர்த்தி மற்றும் அருண்பாண்டியன் ஆகியோர் தயாரித்த இந்தப் படத்தை அய்ங்கரன் இன்டர்னேசனல் நிறுவனம் வெளியிட்டது.

மேலும் இந்தப் படத்தில் சினேகா கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார். இசை விஜய் ஆண்டனி மற்றும் ஜீ. வி. பிரகாஷ். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான வசனங்களை எழுதியிருந்தார். சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க : எனக்கு மட்டும் ஏன் அப்படி பண்ண?.. நெல்சனுக்கு போன் போட்டு மீண்டும் திட்டிய விஜய்.. என்ன ஆச்சு?

இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிலேயே எடுக்கப்பட்டன. இந்த படத்தின் கதைப்படி வேலை பார்க்கும் பெண்கள் தேவையில்லாமல் பேசியோ அல்லது வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்தாலோ அந்தக் கடையின் மேனேஜரான இயக்குனர் வெங்கடேசன் அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தி திரும்ப அனுப்புற மாதிரியான காட்சி.

இந்தக் காட்சிக்கு மிகவும் கொடூரத்தனமான ஒரு ஆளை நடிக்க வைக்க வேண்டும் என இயக்குனர் வசந்தபாலன் நினைத்தாராம். அதற்கு சரியான ஆள் வெங்கடேசன் தான் என்று அவர் எண்ணியதற்கு பின்னனியில் ஒரு  காரணமும் இருக்காம். ஏற்கெனவே ஜெண்டில்மேன் படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் தான் வசந்தபாலனும் வெங்கடேஷும்.

இதையும் படிங்க : இப்படி ஒரு பகை இருந்தும் உதவி செஞ்சிருக்காரே? ‘பிதாமகன்’ தயாரிப்பாளரை தக்க நேரத்தில் காப்பாற்றிய விக்ரம்

அப்போது சங்கர் கூட அந்தளவுக்கு டார்ச்சர் செய்யமாட்டாராம். ஆனால் வெங்கடேசன் வசந்தபாலனை வறுத்து எடுப்பாராம். ஒரு வசனம் சரியாக எழுதவில்லை என்றால் உடனே பேப்பரை கிழித்து போடுவது, அடிக்கடி உன்னை வேலையில் இருந்து தூக்கி விடுவேன் என்று வசந்தபாலனை மிரட்டுவது என இருந்தாராம்.

அதனால் சில சமயங்களில் வசந்தபாலன் அவர் பெற்றோரிடம் போய் அழுவாராம். அதனால் தான் இந்த முகம் அப்படியே என் மனதில் பதிந்து விட்டது என்றும் அங்காடித்தெரு பண்ணும் போது கரெக்டா நியாபகத்துக்கு வந்தார் என்றும் வசந்தபாலன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top