KH234 படத்தில் நடிக்கும் நடிகைக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்! இப்படி ஒரு ஆஃபரை கமல் கொடுப்பாருனு நினைக்கல

Published on: October 27, 2023
kamal
---Advertisement---

KH234: கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து மீண்டும் தனது வெற்றிக் கூட்டணியை பலப்படுத்த வருகிறார்கள். நாயகன் வெற்றிக்கு பிறகு தனது 234வது படத்தின் மூலம் மீண்டும் மணிரத்தினத்தோடு கைகோர்க்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்தப் படத்திற்கான பூஜை அண்மையில் போடப்பட்டது.

அது சம்பந்தமான புகைப்படமும் இன்று இணையத்தில் வெளியானது. இந்த படத்தை கமல் தனது சொந்த தயாரிப்பிலேயே தயாரிக்க இருக்கிறார். ஏற்கனவே கமல் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் இந்தியன் 2.

இதையும் படிங்க: என்னய்யா நடக்குது? இங்க அடிச்சிட்டு இருக்காங்க – ரஜினி ரசிகனா விஜய் செய்த காரியத்தை பாருங்க

ஆனால் படத்தின் நீளம் கருதி மூன்று பாகமாக இந்தியன் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் கமல் தனது KH234 படத்திற்கான வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமலுடன் நடிகை த்ரிஷா நடிப்பதாக செய்திகள் அடிபட்டது.

ஆனால் சமீபத்திய தகவலின் படி நடிகை நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு வருகிறதாம். ஆனால் இந்தப் படத்தில் நயனுக்கு சம்பளமாக 12 கோடி தொகையை ஆஃபராக கொடுக்க இருக்கிறாராம் கமல்.

இதையும் படிங்க: அடியே அள்ளுதே!. அழகோ கொல்லுதே!.. கிளுகிளுப்பு காட்டி கிக் ஏத்தும் அதுல்யா ரவி…

த்ரிஷாவிடமும் இதே சம்பளம்தான் பேசப்பட்டது. இருவரில் யார் நடித்தாலும் அவர்களுக்குண்டான சம்பளம் 12 கோடி என்று உறுதியாகிவிட்டது. அதனால் இந்தப் படத்தின் மூலம் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக த்ரிஷாவோ அல்லது நயன்தாராவோ இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

த்ரிஷா ஏற்கனவே கமலுடன் உத்தமவில்லன் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு வேளை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டால் கமலுடன் முதன் முறையாக நயன் ஜோடி சேரும் படமாக இந்த KH234 திரைப்படம் அமையும்.

இதையும் படிங்க: செழியனிடம் சைக்கோவாக மாறிய மாலினி… ஆனா கடுப்பாகுறது என்னவோ ரசிகர்கள் தான் ஜி..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.