விமானத்திலேயே பறந்த கவிஞர் வாலியின் பாடல் வரிகள்! ரஜினியின் பாடல் ஹிட் ஆனதுக்கு இதுதான் காரணமா?

by Rohini |   ( Updated:2023-09-11 15:08:08  )
vaali
X

vaali

தமிழ் சினிமாவில் கவிஞர் வாலியின் படைப்பு அளப்பரியாதது. எளிய தமிழ் நடையில் வரிகளை எழுதி ரசிகர்களை கவர்ந்தவர். அது தத்துவப் பாடல்களாகட்டும், கவித்துவமான பாடல்களாகட்டும். காட்சிக்கேற்ப வரிகளை அமைத்து புகழ் பெற்றவர்.

வாலிபக் கவிஞராக எம்ஜிஆர் முதல் இப்போது இருக்கும் தனுஷ் வரை அனைத்து நடிகர்களின் படங்களுக்கும் இவர் பாடல்களை எழுதியிருக்கிறார். தெளிவான தமிழிலும் பாடல்களை எழுதக் கூடியவர். அதே சமயம் ஆங்கிலம் கலந்த காதல் , ரொமாண்டிக் பாடல்களையும் எழுதக் கூடியவராக வாலி விளங்கினார்.

இதையும் படிங்க : சியான் விக்ரம் தான் பொன்னியின் செல்வன் 2 தோல்விக்கு காரணமா?.. ப்ளூ சட்டை மாறன் புது உருட்டு!..

இந்த நிலையில் ரஜினி , மம்மூட்டி நடித்த தளபதி படத்தில் சின்னத்தாயவள் என்ற பாடலுக்கு வரிகளை எழுதியவர் வாலிதான். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

அந்தப் பாடல் ரிக்கார்டிங் மும்பையில் நடைபெற்றதாம். வாலியை மும்பை வரச் சொல்லி எழுத சொல்லியிருக்கிறார்கள். ஆனால் வாலியால் மும்பை போக முடியாத சூழ்நிலையாம். அதனால் இளையராஜா இரவு பாடல் வரிகளை எழுதி காலையில் கொடுத்து விடும் படி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இப்படி நின்னா நாங்க காலி!.. கட்டழகை கச்சிதமா காட்டி இழுக்கும் ரச்சிதா

வாலியும் பாடல் வரிகளை சென்னையில் எழுதியவாறு விமானத்திலேயே வரிகளை கொடுத்தனுப்பினாராம் வாலி. இந்த பாடல் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்தமான பாடலாம். ஏனெனில் இளையராஜாவின் அம்மா பெயர் கூட சின்னத்தாயாம்.

இப்படி சென்னையில் இருந்து கொண்டே இந்த பாடலை விமானத்தின் மூலம் பறக்க விட்டு ஹிட் கொடுத்திருக்கிறார் வாலி. அதற்கு மிகவும் உறுதுணையாகவும் இருந்தாராம் இளையராஜா. இந்த படத்தில் ரஜினிக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் இருந்த உறவு குந்தவை, கர்ணனுக்கு இடைப்பட்ட உறவை மையப்படுத்தி அமைந்ததால் வரிகளை எழுத மிக எளிதாக இருந்தது என்று வாலி கூறினார்.

இதையும் படிங்க : அது வேற வாய்.. இது நாற வாய்!.. லோகேஷ் கனகராஜ் மேட்டரில் அந்தர் பல்டி!.. வைரலாகும் மீம்ஸ்!..

Next Story