கலெக்டர் ஆபிசில் நடந்த தரமான சம்பவம்!.. அந்த வகையில் இந்தியன் 2 படம் ஹிட்டுதான்!.

0
150
indian

ஷங்கரின் இயக்கத்தில் 1996ம் வருடம் வெளியான திரைப்படம்தான் இந்தியன். கமல் இரட்டை வேடத்திலும் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி என பலரும் நடித்திருந்தனர். ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களையெடுக்கும் இந்தியன் தாத்தாவாக கமல் அசத்தி இருந்தார்.

மக்களின் கோபத்தை இப்படம் பிரதிபலித்திருந்ததால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று ஹிட் அடித்தது. தமிழக அரசின் பல துறைகளிலும் உள்ள அலுவலகங்களில் அதிகாரிகள் எப்படி லஞ்சம் வாங்குகிறார்கள் என படம் போட்டு காட்டி இருந்தார் ஷங்கர். அவர்களை இந்தியன் தாத்தா குத்தி கொலை செய்வது போலவும் காட்சிகளை அமைத்திருந்தார்.

ஆனால், இந்தியன் படம் வந்ததால் தமிழ்நாட்டில் லஞ்சம் ஒழிந்ததா என்றால் இல்லை. இந்தியா போன்ற மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. அதற்காக சினிமாவில் அதை காட்டாமல் இருக்க முடியுமா என யோசித்த ஷங்கர் இந்தியன் 2-வை கையில் எடுத்தார்.

இந்த படத்தில் இந்தியாவின் பல ஊர்களிலும் மக்களின் பணத்தை ஆட்டையை போட்டு சம்பாதித்து பெரும் செல்வந்தர்களாக இருக்கும் பண முதலைகளை இந்தியன் தாத்தா களையெடுப்பது போல காட்சிகளை ஷங்கர் அமைத்திருந்தார். மேலும், ஒவ்வொரும் தன்னுடைய வீட்டில் இருக்கும் தவறுகளை தட்டி கேட்பதோடு, தப்பு செய்திருந்தால் தண்டிக்க வேண்டும் எனவும் கருத்து சொல்லப்பட்டிருந்தது.

ஆனால், இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே எழுந்தது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் ‘இந்தியன் தாத்தா கதற விட்டாரு… படம் போர்… பெரிதாக ஒன்றுமிலை.. எதிர்பார்த்தது போல படம் இல்லை. படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது’ என கருத்து சொன்னார்கள். ஒருபக்கம் தியேட்டர்களிலும் கூட்டம் இல்லை. இது ஷங்கர் மற்றும் கமல் இருவரையுமே அப்செட் ஆக்கி இருக்கிறது,

news

இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு சுவற்றில் ‘மக்கள் கொடுக்கும் மனுவுக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்யாதீர்கள். மக்களின் குறைக்கு விரைவான நடவடிக்கை எடுங்கள். இப்படிக்கு இந்தியன் 2’ என எழுதப்பட்டிருந்தது. அதேபோல், வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தனது கணவரை அவரின் மனைவியே போலீசில் சிக்க வைத்திருக்கிறார்.

இவை செய்தியாகவும் சில பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கிறது. வசூல் இல்லை என்றாலும் இது இந்தியன் 2 படத்தின் வெற்றியாகவே பார்க்கலாம் என சிலர் சொல்லி வருகிறார்கள்.

google news