இந்திய நடிகர்களுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள் யார் தெரியுமா? இவர் தல ஃபேனா?

by Akhilan |   ( Updated:2022-09-22 20:15:03  )
தமிழ் நடிகர்கள்
X

தமிழ் சினிமா முதல் இந்தி சினிமா வரை பிரபலங்களுக்கு முக்கியமே ரசிகர்கள் தான். அவர்களால் தான் முன்னணி நடிகர்கள் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தில் மின்னிக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும், மற்ற மொழிகளை விட தமிழ் ரசிகர்கள் தான் அதிக ரசனை கொண்டவர்கள். இது பல நேரங்களில் அப்பட்டமாகவே தெரியும். அதனால் தான் மற்ற மொழி நடிகர்களை விட தமிழ் நடிகர்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். இதில் நம்மை போல தமிழ் நடிகர்களின் ரசிகர்களாக இருக்கும் இந்திய நடிகர்கள் சிலரை பற்றி தெரிந்து கொள்வோமா.

அல்லு அர்ஜூன்:

தெலுங்கில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தில் இருப்பவர் அல்லு அர்ஜூன். இவர் தமிழில் தளபதி விஜயின் சூப்பர் ஃபேன் எனக் கூறப்படுகிறது. அதிலும், விஜயின் கத்தி மற்றும் துப்பாக்கி படம் அர்ஜூனின் ஃபேவரிட் படங்கள் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜய் மட்டுமல்லாது தற்போது தனுஷின் தீவிர ரசிகராகவும் மாறி வருகிறாராம். இதற்கு தனுஷின் வளர்ச்சி தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஷாருக்கான்:

இந்தி திரையுலகின் கான் நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவருக்கும் தளபதி விஜய் தான் ஃபேவரிட் எனக் கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாது விஜயின் நடிப்பும் அவரின் உடல் அமைப்பும் ஷாருக்கிற்கு ரொம்ப பிடிக்கும். மேலும், விஜயின் எல்லா படங்களையும் ஷாருக் மறக்காமல் பார்த்து விடுவாராம்.

ரஜினிகாந்த்:

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ரஜினிகாந்திற்கு யார் ஃபேவரிட் தெரியுமா? இவருக்கு ரொம்ப பிடித்தது சூர்யா தானாம். இவரின் காக்க காக்க படத்தை பார்த்து ரஜினியே மெய்சிலிர்த்து விட்டாராம். அப்படத்தை பார்க்க கர்நாடகாவில் ஒரு தியேட்டருக்கு மாறு வேஷத்தில் சென்றதாக ஒரு மேடையில் தெரிவித்து இருக்கிறார். அப்படத்தினை பார்த்த பிறகு, போலீஸ் வேடம் கட்சிதமாக பொருந்தி இருப்பது சூர்யாவிற்கு தான் என தனக்கு நெருங்கமானவர்களிடம் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழ் நடிகர்கள்

நாகர்ஜூனா:

தெலுங்கில் மாஸ் நாயகனாக இருப்பவர் நாகர்ஜூனா. இவரின் ஃபேவரிட் யார் எனக் கேட்ட போது சிறிதும் யோசிக்காமல் எனக்கு எப்போதுமே சூர்யா தான் எனக் கூறியுள்ளார். தோழா சக்சஸ் மீட் நடைபெற்ற போது இதை தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, சூர்யாவின் கஜினி படம் தான் அவருக்கு ரொம்ப பிடித்த படமாம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் சூர்யா. இவரின் படம் வெளியாகும் போது எங்க மொழி படத்தினை வெளியிடவே யோசிப்போம் எனக் தெரிவித்து இருக்கிறார்.

இதை படிங்க: மாஸ்டர் ரீமேக்கிலிருந்து விலகிய சல்மான்கான்.. .சொன்ன காரணம்தான் ஷாக்!….
சல்மான்கான்:

இந்தி உலகின் டான் சல்மான் கானுக்கு ஃபேவரிட் அஜித் தானாம். இதை குறித்து கேட்டப்போது எனக்கு அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும். அவரின் வாலி படத்தினை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதே எனக்கு அவர் மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளான தமன்னா, நயன், டாப்ஸி உள்ளிட்ட பல நடிகைகளின் ஃபேவரிட்டும் தல தான் என்று பல பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

Next Story