latest news
4 ஆண்டுகளில் 139 படத்தில் ஹீரோ அப்பா… 13 வருடத்தில் 36 படம் நடித்த ஹீரோ மகன்… யார் தெரிதா?
Hero: பொதுவாக தற்போது இருக்கும் தமிழ் ஹீரோக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படங்கலோ அல்லது இரண்டு படத்திலோ மட்டுமே நடித்து வருகின்றனர். ஆனால் ஒரு நடிகர் வருடத்திற்கு 35 படம் வரை நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா?
தமிழ் சினிமாவில் நடிகர்கள் கதை கேட்டதற்கே ஒரு மாதம் வரை நேரம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் ஒரு படத்தை முடித்துக் கொடுக்கவே குறைந்தபட்சமாக மூணு மாதம் நேரம் எடுத்துக் கொள்வதே வழக்கமாக இருக்கிறது.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷை 3 நாள் டார்ச்சர் செய்த தனுஷ்!.. சூட்டிங்கில் நடந்த களேபரம்?!.. விளாசிய பிரபலம்!..
ஆனால் பிரபல ஹீரோ ஒருவர் வருடத்திற்கு 35 படங்கள் வரை நடித்திருக்கிறார். ஒரு படம் மட்டுமல்ல தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் இதையே செய்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. மலையாள சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கும் மம்முட்டி தான்.
50 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் நடிகர் மம்முட்டி மலையாள மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, ஆங்கில படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது 73 வயதாகும் மம்முட்டி இன்னும் தன்னுடைய வயதை ஒரே மாதிரி பாதுகாத்து வருகிறார்.
ஏகப்பட்ட விருதுகளை குவித்திருக்கும் மம்முட்டி இதுவரை தன்னுடைய சினிமா கேரியரில் 420 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 1983 ஆம் ஆண்டு 36 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். ஒரே வருடத்தில் அதிக படங்களை நடித்த முதல் நடிகராகவும் மம்முட்டிதான் இருக்கிறார்.
இதையும் படிங்க: நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா!… வரும் நவம்பர் 27 தீர்ப்பு?!… என்ன ஆக போதோ?…
இவருடைய மகனும் பிரபல நடிகருமான துல்கர் சல்மான் 2011ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். மலையாளத்தில் ஹிட் கொடுத்தாலும் தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இவர் சினிமா துறைக்கு வந்து 13 வருடங்கள் கடந்து விட்டது.
இருந்தும் தந்தையை போல இல்லாமல் இதுவரை துல்கர் சல்மான் 36 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த ரசிகர்கள் நீங்க மனுஷன் தானா என ஆச்சரியமாக கேள்வி கேட்டு வருகின்றனர். 73 வயதை கடந்தும் இன்னமும் மம்முட்டி தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.