More
Categories: Cinema History Cinema News latest news

மூன்றுமுகம் படத்துக்கும் ரஜினியின் தந்தைக்கும் இருக்கும் அந்த ஒரு தொடர்பு? என்ன தெரியுமா?

Rajinikanth: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் வளர்ந்து வந்த சமயம் அவர் நடிப்பில் வெளியான மூன்று முகம் திரைப்படத்துக்கும் தந்தை ரானோஜி ராவுக்கு ஒரு மிகப்பெரிய தொடர்பு இருக்காம். அதுகுறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா, செந்தாமரை இணைந்து நடித்த திரைப்படம் மூன்று முகம். இப்படத்தில் அப்பா மகன்கள் என மூன்று வேடங்களில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இதில் அப்பா அலெக்ஸ் பாண்டியன் வேடம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஜெயிலர் பட ஹிட்டுக்கே நான்தான் காரணம்!.. பல கோடிகள் சம்பளம் கேட்கும் தமன்னா!..

அக்டோபர் ஒன்றாம் தேதி 1982 ஆம் ஆண்டு இப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இப்படம் 250 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக ரஜினிக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் கொடுக்கப்பட்டிருந்தது.

இப்படம் ரிலீஸாகி ரஜினி தன்னுடைய திரை வாழ்க்கையில் உயர்வை கொடுத்து வந்த நிலையில் இத்திரைப்படம் அவர் தந்தையின் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறதாம். மூன்று முகம் படத்திற்கும் ரஜினிகாந்தின் தந்தை ரானோஜி ராவுக்கு ஓர் ஒற்றுமை உள்ளது. 

இதையும் படிங்க: டான்ஸ் இருக்கனும்.. ஃபைட் இருக்கனும்! கதை இருக்கனுமே.. கமெர்ஷியலை நம்பி கோட்டை விடும் லாரன்ஸ்

மூன்று முகம் வெளியான அக்டோபர் 1-ம் தேதி மாலை 4.30-க்கு தான் ரானோஜி ராவ் இறந்துவிட்டாராம். அதை சென்னையில் இருந்த ரஜினியின் வீட்டுக்குத் தெரிவித்தபோது அவர் ‘மூன்று முகம்’ பிரிவியூ ஷோவில் இருந்தாராம். பின்னர் வீட்டுக்கு வந்து விவரம் அறிந்தவர். மறுநாள் காலை விமானத்தில் மனைவியுடன் தந்தை இறுதியாத்திரைக்கு வந்தாராம்.

மூன்று நாட்கள் பெங்களூரில் இருந்து தந்தையின் ஈமச் சடங்குகளில் கலந்து கொண்டு சென்னை சென்ற ரஜினிகாந்த், மீண்டும் பத்தாம் நாள் வந்து இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் மூன்று முகம் படத்தில் ரவுடி கெட்டப்பில் ரஜினியின் ஹேர்ஸ்டைல் தான் அவர் தந்தையின் ஒரிஜினல் ஹேர்ஸ்டைல் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Published by
Akhilan

Recent Posts