Connect with us
lawrence

Cinema News

டான்ஸ் இருக்கனும்.. ஃபைட் இருக்கனும்! கதை இருக்கனுமே.. கமெர்ஷியலை நம்பி கோட்டை விடும் லாரன்ஸ்

Actor Lawrence: ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் லாரன்ஸ். டான்ஸராக ஆரம்பித்த தனது கெரியரை ஒரு ஹீரோவாக அதுவும் பக்கா கமெர்ஷியல் ஹீரோவாக மாற்றியிருக்கிறார். முனி படத்தின் மூலம் ஒரு நடிகர் என்பதை நிருபித்தார் லாரன்ஸ். அதற்கு முன்புவரை ஒரு சாதாரண நடிகராக துணை நடிகராகத்தான் படங்களில் நடித்தார்.

முனி படம்தான் லாரன்ஸுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதன் பிறகு த்ரில்லர் கதைகளில் கவனம் செலுத்திய லாரன்ஸ் தொடர்ந்து காஞ்சனா படத்தை மூன்று பாகமாக எடுத்து நடித்து அதில் வெற்றியும் பெற்றார். காஞ்சனா படத்தால்தான் லாரன்ஸின் மார்கெட்டும் எகிறியது.

இதையும் படிங்க: வாய்ப்பு கொடுத்தும் அசிங்கப்படுத்தப்பட்ட ரஜினிகாந்த்… நிலைகுழைய வைத்த அந்த இயக்குனர்…

ஒரு படத்தின் மூன்று பாகங்களும் வெற்றியடைந்தது என்றால் அது காஞ்சனா படமாகத்தான் இருக்கும். மக்கள் மத்தியிலும் காஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும் படி அமையவில்லை.

தொடர்ந்து சரிவையே கண்டன. அவரின் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 திரைப்படமும் பெரிய மொக்கை வாங்கிய திரைப்படமாக அமைந்தது. கடைசியாக வெளி வந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கூட எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பைத்தான் அனைவரும் பாராட்டினார்கள்.

இதையும் படிங்க: ஜெயிலர் பட ஹிட்டுக்கே நான்தான் காரணம்!.. பல கோடிகள் சம்பளம் கேட்கும் தமன்னா!..

ஒரு கமெர்ஷியல் ஹீரோவாக நடித்து வந்த லாரன்ஸை தேடி ஒரு அருமையான வாய்ப்பு வந்திருக்கிறது. குறுகிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான திரைப்படம் அயோத்தி. அந்தப் படம் எந்தளவு ரசிகர்களை ஈர்த்தது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் படத்தை மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவே கொண்டாடிய ஒரு திரைப்படமாக அயோத்தி திரைப்படம் விளங்கியது. இந்த நிலையில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க போவதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் திடீரென அந்தப் படத்தில் இருந்து லாரன்ஸ் விலகியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! இந்த ஒரு காரணத்துக்காக அந்தப் படத்தில் நடிக்க தயங்கிய தனுஷ்.. இத நம்பனுமா

ஒரு நல்ல பட இயக்குனரை மிஸ் செய்கிறாரே என லாரன்ஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஒரு வேளை அவருக்கே ஏற்ற அந்த டான்ஸ் , ஃபைட் இவரிடம் இருக்குமா என யோசித்துக் கூட இந்த பட வாய்ப்பை மிஸ் செய்திருப்பார் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top