Connect with us
vijay and jeson sanjay

Cinema News

அப்பா – மகனுக்கு இடையே புகுந்த லைக்கா!.. இதுக்கு பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா?!…

விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தமிழ் சினிமாவின் இயக்குனர் ஆவார்.

குடும்பம், வசந்த ராகம் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின் துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, தெறி போன்ற பல வெற்றி படங்களையும் தந்துள்ளார்.

இதையும் வாசிங்க:விஜய் மீது ஓவர் பாசத்தில் சீமான்… ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய தளபதி! அண்ணன இப்டி கேட்டுப்புட்டியேப்பா!

விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே சம்பாதித்துள்ளார். இவர் தற்போது தனது 67வது படமான லியோவில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தினை பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

இப்படம் திரைக்கு வருவதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருகின்றனர். தற்போது இவரின் மகனான சஞ்சய் தனது இளம் வயதிலேயே இயக்குனராக வலம் வர தயாராக உள்ளார். இவரின் படத்தினை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இவர் தனது குழந்தை பருவம் முதலே லண்டனில் வசித்து வருகிறார். இவர் லண்டனில் முறையாக சினிமா இயக்கத்தினை பற்றிய படிப்பினை படித்துள்ளார்.

இதையும் வாசிங்க: ஜெயலலிதாவை தொடர்ந்து சின்னம்மாவிடமும் இருந்து வந்த மிரட்டல்! சசிகலா தூண்டுதலில் விஜய் நடித்த படம்

தற்போது இவரது படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் சமூக ஊடகங்களிம் பல வித கருத்துகள் உலாவி வருகின்றன. தளபதியின் 69 மற்றும் 70வது படங்களை லைகா நிறுவனத்திற்கு கொடுத்ததாலேயே அவரின் மகன் சஞ்சய்க்கும் லைகா நிறுவனம் வாய்ப்பு கொடுத்துள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன.

ஆனால் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை எனவும் விஜய் தனது மகனுக்காக எந்த சிபாரிசும் செய்யவில்லை எனவும் வலைதளவாசிகள் பதில் அளிக்கின்றனர். மேலும் விஜய்க்கும் அவரது மகன் சஞ்சய்க்கும் போதுமான அளவு பேச்சு வார்த்தை இல்லை எனவும் அவர் இயக்குனராக வருவது விஜய்க்கே தெரியாது எனவும் கூறுகின்றனர்.

இதையும் வாசிங்க: அஜித் சொன்னதால்தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்தாரா விஜய்?.. தெய்வ வாக்கு தல!…

google news
Continue Reading

More in Cinema News

To Top