Cinema News
கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் இல்லையா? விஜய் எடுத்த அந்த முடிவின் பின்னணி ரகசியம் இதுதான்…!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் நடித்து வரும் கோட் படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது. காரணம் விஜய்க்கு இது கடைசி படத்துக்கு முந்தைய படம். இந்தப் படத்தின் போது தான் தன்னோட அரசியல் பிரவேசத்தைப் பற்றியும் அறிவித்தார்.
அவரது அடுத்தடுத்த நிலைப்பாடு எப்படி இருக்கும்? அது படத்தில் எதிரொலிக்குமா என்றும் ஆர்வத்தில் உள்ளனர். அதனால் கோட் படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ லாஞ்ச் ஏன் வைக்கவில்லை என்று ஒரு விளக்கத்தை பிரபல வலைப்பேச்சு அந்தனன் இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு படத்துக்கு ஆடியோ லாஞ்ச் ரொம்பவே சப்போர்ட்டா இருக்கும். ஆனா கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்சே இல்லன்னு சொல்றாங்க. விஜய் என்ன சொல்றாருன்னா ஆகஸ்டுல கட்சிக்கொடியை அறிமுகப்படுத்துற மாதிரி இருக்கேன்.
இப்போ ஆடியோ லாஞ்ச் வச்சா ஒரே நேரத்துல ரெண்டு நிகழ்ச்சிகளான்னு மக்களுக்குப் போரடிக்கும். அதனால ஒரு நிகழ்ச்சி இருக்கட்டும்னு சொல்றாரு. இப்ப கூட ரசிகர்களுக்கு இப்படித் தான் சொல்லிருக்காரு. என்னுடைய ரசிகர்கள் யாரும் கட்சிக் கொடியை தியேட்டர்ல வைக்கக்கூடாதுன்னு.
கட்சிக்கொடியை சினிமாவில் எங்கேயுமே பயன்படுத்தக் கூடாது. அப்படின்னா சினிமா வேறு. அரசியல் வேறுன்னு பார்க்குற மாதிரி தான் இருக்கு. அப்போ அப்படித்தான பார்க்கணும். ஆடியோ லாஞ்ச் வேற. கொடி அறிமுகம் வேற. அப்படித்தானே அவரு நினைக்கணும். ஏன் அதை மட்டும் ஒண்ணா நினைக்கிறாருன்னு கேள்வி எழுகிறது.
இவ்வளவு செலவு பண்ணி இத்தனை கோடிகளைக் கொட்டி சினிமா எடுக்குறவங்களுக்கு அதை எந்தெந்த வகையில புரொமோட் பண்ணனும்னு தெரியாமலா இருக்கும்? இது விஜய்க்கும் மட்டும் தெரியாதா? ஒண்ணும் இல்ல.
இப்போ ஜெயிலரையே எடுத்துக்கோங்க. ஆடியோ லாஞ்சுக்கு முன், ஆடியோ லாஞ்சுக்குப் பின் அந்தப் படம் எப்படி மாறினது? அப்படித்தான் ஆடியோ லாஞ்ச் எந்த ஒரு படத்துக்கும் சப்போர்ட்டா இருக்கும். அது வேண்டாம்னு முடிவு எடுக்கறது ரொம்ப ரொம்ப தப்பு. டிரெய்லர்லாம் அடுத்தடுத்து வந்துடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.