Connect with us
pra

Biggboss Tamil 7

ஓவர் கான்ஃபிடண்ட்! எங்க வந்து உட்கார வச்சிருக்கு பாருங்க – பிக்பாஸில் இருந்து வெளியேறும் பிரதீப்

Biggboss Pradeep: பிக்பாஸில் இருந்து இந்த வாரம் பிரதீப் வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. ஆரம்பத்தில் இருந்தே சக போட்டியாளர்களுக்கு ஒரு டஃப் போட்டியாளராகத்தான் பிரதீப் இருந்து வந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பார்த்துக் கொண்டிருந்த ரயில்வே வேலையை உதறித்தள்ளி வந்தவர் பிரதீப்.

மாதம் 60000 சம்பளத்தில் இருந்த பிரதீப் ஒன்றிரண்டு படங்களில் நடித்தார். ஆனாலும் வருமானம் போதவில்லை. எப்படியாவது தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் தளத்தை தேர்வு செய்தார் பிரதீப்.

இதையும் படிங்க: இப்படி நின்னா ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது!.. ஜான்வி அழகில் மயங்கிய புள்ளிங்கோ!…

ஆனால் வந்த முதல் நாளிலேயே வினுஷாவிடம் சண்டைக்கு நின்றார். அதன் பின் விஷ்ணு என முதல் நாளில் தன் பஞ்சாயத்தை ஆர்மபித்தார் பிரதீப். இவரின் நடத்தை, பழகும் முறை என எதுவுமே பிடிக்காத வகையில்தான் மற்ற போட்டியாளர்கள் இருந்து வந்தனர். ஆரம்பத்தில் ரூல்ஸ் முறைப்படிதான் நன்கு விளையாடி வந்தார்.  இதனாலேயே மக்கள் இவரை கொண்டாடினார்கள்.

ஆனால் போக போக கோபத்தில் என்ன பேச வேண்டும்? எப்படி  நடந்து கொள்ள வேண்டும் என தெரியாமல் மற்ற போட்டியாளர்களிடம் மிக கடுமையாக நடந்து கொண்டார். இன்று வெளியான ப்ரோமோவில் கூட பூர்ணிமா நைட்  நிம்மதியா தூங்க கூட முடியவில்லை , பயமாக இருக்கிறது என பிரதீப்பை கூறினார். மேலும் மற்ற போட்டியாளர்களும் ஏராளமான குற்றச்சாட்டுக்களை பிரதீப் மீது அடுக்கினார்கள்.

இதையும் படிங்க: பாத்ரூமில் வேண்டாத வேலை பார்த்த பிரதீப்! சரியான தண்டனையை கொடுத்த கமல்..

அதனால் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியதாக சில நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த வார எலிமினேஷனில் அன்னபாரதி வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம்தான் வைல்டு கார்ட் எண்டிரியாக நுழைந்த அன்னபாரதி  குறைவான ஓட்டுக்களை பெற்று அவர் வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கமல் கேட்ட கேள்வியில் ஆடிப்போன தயாரிப்பாளர்…. அப்படி என்னதான் கேட்டாரு?

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top