Connect with us
sunil

Cinema News

நடிப்பு வரலன்னு டீ டம்பளரில் அடித்த டைரக்டர்!.. புஷ்பா-வில் மிரட்டி ஜெயிலரில் ரசிக்க வைத்த சுனில்..

ஜெய்லரில் ஒரு சினிமா கலைஞனாக நடித்து அசத்தியிருப்பார் நடிகர் சுனில். காமெடி கலந்த எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரும் வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள். ஒரு வேளை படம் முழுக்க சுனிலின் கதாபாத்திரம் அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்றும் ஏங்கவும் வைத்தது.

ஆரம்பத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்குள்ளேயே வந்தாராம் சுனில். ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது கொடுக்கும் வசனங்களை அச்சுப் பிறழாமல் பேசி விடுவாராம். ஆனால் முக பாவனைகள் சுத்தமாக வராதாம்.

இதையும் படிங்க : காதலியை அறிமுகம் செய்து வைத்த விக்ரம் பட நடிகர்.. பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

அப்படி ஒரு படத்தில் நடிக்கும் போது இதே மாதிரி போய்க் கொண்டிருந்ததால் அந்தப் படத்தின் இயக்குனர் அவர் குடித்துக் கொண்டிருந்த டீ டம்பளரை சுனில் மீது வீசி எறிந்து விட்டாராம். மிகவும் அப்செட்டில் இருந்த சுனிலுக்கு அறிவுரை வழங்கியவர் நடிகர் பிரகாஷ்ராஜ். அதாவது கண்ணாடி முன் நின்று நடித்துப் பார். அதுதான் நமக்கு நடிப்பை சொல்லித்தரும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ் சொன்னதை போல கண்ணாடி முன் நின்று பிராக்டிஸ் செய்ய செய்ய அதன் பிறகுதான் தேறியிருக்கிறார். தமிழில் சுந்தரபுருஷன் படத்தை தெலுங்கில் ரவி தேஜாவை வைத்து எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழில் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சுனில்தான்  நடிக்க வேண்டியிருந்ததாம்.

அந்த நேரம் ரவிதேஜாவின் இடியட் படமும் ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைய அவரை வைத்து சுந்தரபுருஷன் படத்தை எப்படி எடுப்பது என யோசித்தார்களாம். பிறகு சுனிலை வைத்தே எடுத்துவிடலாம் என முடிவெடுத்திருக்கின்றனர். முதலில் சுனில் மறுக்க அதன் பின் நடிக்க ஒப்புக் கொண்டாராம். தெலுங்கிலும் படம் மாபெரும் ஹிட்.

இதையும் படிங்க : ரஜினியின் நோக்கமே இதுதான்! ஜெய்லர் படத்தில் இத்தனை மாற்றம் செய்ததன் ஒரே பின்னணி! அப்டி போடு!

இதன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து மக்கள் மனங்களை வென்றிருக்கிறார் சுனில். புஷ்பா படத்திலும் மங்களம் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தயங்கினாராம். இருந்தாலும் துணிந்து நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதன் விளைவுதான் ஜெய்லர் திரைப்படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்தார். ஆனாலும் ஜெய்லர் திரைப்படத்தில் கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் படம் முடிந்து வெளியே வரும் வரை நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்திருந்தார் சுனில்.

google news
Continue Reading

More in Cinema News

To Top