Jananayagan: மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொள்ளும் ஜனநாயகன்! சுத்தி சுத்தி அடிதான்

இந்த பொங்கல் ரசிகர்களுக்கு ஒரு தரமான பொங்கலாக இருந்திருக்க வேண்டியது. ஜன நாயகன் படம் ரிலீஸாகி இன்று திரையரங்குகள் முழுவதும் ஒரு திருவிழாவாக காட்சியளிக்க வேண்டியது. ஆனால் எதிர்பாராத விதமாக ஜன நாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் பிரச்சினையால் ரிலீஸாகவில்லை. அது சம்பந்தமான வழக்குதான் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபிதியோல், பிரகாஷ்ராஜ் ஆகியோ நடிப்பில் உருவான திரைப்படம் ஜன நாயகன். இது தெலுங்கில் வெற்றிபெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக். இருந்தாலும் விஜய் அரசியலுக்கு போனபிறகு எடுக்கப்பட்ட படம் என்பதால் கொஞ்சம் அரசியல் வசனங்கள் தூக்கலாக இந்தப் படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

டிரெய்லர், பாடல்கள் எல்லாம் வெளியாகி பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த மாதமே சென்சாருக்கு அனுப்பியும் இன்னும் அதற்கான சான்றிதழை கொடுக்காமல் தணிக்கை வாரியம் இழுத்தடித்து வருகிறது. சமீபத்தில்தான் தனி நீதிபதி ஆஷா சான்றிதழை கொடுக்க ஒரு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் அவருடைய உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்திருக்கிறது.

அது சம்பந்தமாக ஜன நாயகன் படத்தின் பட நிறுவனம் சுப்ரீம் கோர்ட் திங்கள் கிழமை போவதாக அறிவித்திருக்கிறார்கள். அங்கு போனாலும் உடனே ஹியரிங் வருமா என்று சொல்ல முடியாது. அன்றே வருமா? அல்லது செவ்வாய்கிழமை வருகிறதா என்று தெரியாது. 14 ஆம் தேதி அங்கு சங்கராந்தி விடுமுறை. அப்பொழுது நீதிமன்றத்திற்கு விடுமுறை. அதனால் அந்த வாரம் முழுவதும் விடுமுறை.

அதன் பிறகு படம் எப்போது வரும் என்று தெரியாது. 23 ஆம் தேதிக்கு பிறகு படம் வருமா என்பதும் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. போற வேகத்தை பார்க்கும் போது சுப்ரீம் கோர்ட்டிலேயே தணிக்கை வாரியம் மேல் முறையீடு வாங்கும் என்றுதான் தெரிகிறது. அதனால் ஜன நாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய போராட்டமாகவே இருக்கும். ரிலீஸை தடுக்க முடியாது. ஆனால் ரிலீஸ் தேதி தாமதமாக கிடைக்கும்.