ஜனநாயகனால் தப்பித்த பராசக்தி!.. விஜய் படம் வந்திருந்தா சோலி முடிஞ்சிருக்கும்!…

Published On: January 12, 2026
jananayagan
---Advertisement---

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக இருந்தது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இது அவரின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படம் தொடர்பான வழக்கு வருகிற 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அநேகமாக இந்த மாத இறுதிக்குள் இந்த படம் வெளியாகலாம் என தெரிகிறது.

ஒருபக்கம் இந்த படத்திற்கு போட்டியாக பராசக்தி படத்தை ரிலீஸ் என்கிற அறிவிப்பை விஜய் ரசிகர்கள் விரும்பவில்லை. ‘விஜயுடனே சிவகார்த்திகேயன் போட்டி போடுகிறாரா?’ என்கிற கோபம் அவர்களுக்கு ஏற்பட சிவகார்த்திகேயனை சமூகவலைத்தளங்களில் கடுமையாக திட்ட துவங்கினார்கள்.

ஆனால் ‘இது வியாபாரம் காரணமாக தயாரிப்பாளர் எடுத்த முடிவு.. இது விஜய் சாரிடமே சொல்லிவிட்டோம்.. அவர் எனக்கு வாழ்த்தும் சொன்னார்’ என சிவகார்த்திகேயன் சொன்னார். ஆனாலும் விஜய் ரசிகர்கள் மாறவில்லை.. இப்போது வரை அவரைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. மேலும் பராசக்தி படத்தின் முதல் காட்சி வெளியாவதற்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரவ துவங்கினார்கள்,,
ஒரு பக்கம் படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

parasakthi (1)
parasakthi (1)

பராசக்தி படம் நல்ல முயற்சி தான் என்றாலும் சொன்ன விதம் சரியில்லை.. படத்தின் நீளம் போரடிக்க வைக்கிறது என விமர்சனங்கள் வந்தன.. ஒரு பக்கம் விஜய் ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பியதால் இந்த படத்திற்கான வசூல் குறைந்தது.. முதல் நாள் இப்படம் 11.5 கோடி மட்டுமே வசூல் செய்ததாக சில இணையதளங்கள் செய்து வெளியிட்டது.. ஆனால் முதல் வசூல் 27 கோடி என இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சொன்னது.. ஆனால் அதை பலரும் நம்பவில்லை.

இந்நிலையில் படம் வெளியான இரண்டாம் நாளான நேற்று தமிழகத்தின் பல தியேட்டர்களிலும் பராசக்தி படம் காத்து வாங்கியது.. பல தியேட்டர்களில் ரசிகர்கள் இல்லாமல் காட்சியை காட்சியை ரத்து செய்துள்ளனர். இதையடுத்து ‘இப்படிப்பட்ட ஒரு படத்தை வைத்துக்கொண்டுதான் ஜனநாயகனுடன் மோத முடிவெடுத்தீர்களா? ஜனநாயகன் படம் மட்டும் 9ம் தேதி வந்திருந்தால் பராசக்தி படம் ஒரே நாளில் காலியாகியிருக்கும்.. இப்போது வந்திருக்கும் வசூல் கூட வந்திருக்காது’ என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி வருகிறார்கள்..