விஜய் நடித்து பொங்கலுக்கு ரிலீஸாகக் கூடிய திரைப்படம் ஜனநாயகன். எச். வினோத் இயக்கத்தில் இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்தான் ஜன நாயகன். ஆனால் தமிழில் விஜய்க்கு ஏற்ப சில காட்சிகளில் மட்டும் மாற்றம் செய்து படமாக்கியிருக்கிறார்கள்.
படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கிறது. விஜயின் கடைசி படம் என்பதால் படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என படக்குழுவும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். மேலும் விஜய் கடைசியாக ஒரு பெரிய வெற்றியை கொடுத்ததோடு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுதான் ரசிகர்களும் விரும்புவார்கள்,
அந்த வகையில் நேற்று முழுவதும் படத்தின் ஓட்ட நேரம் குறித்து ஒரு தகவல் வெளியானது. அதாவது ஜன நாயகன் படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 5 நிமிடம் என்று செய்திகள் வெளியானது. இந்த செய்தி வெளியானதும் அனைவருக்கும் அதிர்ச்சி. ஏனெனில் 3 மணி நேரம் ஒரு படத்தில் என்னதான் காட்டப் போகிறார்கள். அதுவும் இதற்கு முன் நன்றாக ஓட வேண்டிய படங்களே இந்த ரன் டைம்- ஆல் தோல்வியை சந்தித்திருக்கின்றன.
அதுவும் விஜய் எப்படி இதற்கு சம்மதித்திருப்பார்? ஒரு வேளை அவருக்கு இது தெரியுமா தெரியாதா? கடைசி படம் வெற்றியோடு இருக்க வேண்டும் என்றுதானே அவரும் நினைத்திருப்பார். அப்படி இருக்கும் போது இந்த ரன் டைம் அந்த வெற்றியை பாதிக்காதா? என்றெல்லாம் பல சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் விசாரித்த போது உண்மையிலேயே இந்தப் படத்தின் ரன் டைம் இன்று இரவு 10 மணிக்குத்தான் முடிவு செய்ய இருக்கிறார்களாம்.
படத்தில் இன்னும் ட்ரிம் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வதந்தியை யாரோ ஒருவர் கிளப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
