Categories: latest news

ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தில் தமிழ் ஹீரோ இல்லையா? அக்கட தேசத்தில் இருந்து தூக்கப்பட்ட சூப்பர்ஸ்டார்..!

Jason Sanjay: விஜயின் மகன் இயக்க இருக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக தமிழ் நடிகர் இல்லை. மலையாள திரைப்படத்தில் இருந்து ஒரு சூப்பர்ஸ்டாரின் வாரிசை களம் இறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களில் முதலிடத்தை பிடித்திருப்பவர் விஜய்.  கிட்டத்தட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் போட்டியில் இருக்கும் விஜய் சமீபத்தில் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்திருக்கிறார்.  முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கும் விஜய் விரைவில் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுக்க இருக்கிறார். 

இதையும் படிங்க: உயிருக்கே உலை வைக்க இருந்த முரட்டுக்காளை திரைப்படம்… ஒரு நொடியில் சுதாரித்த ரஜினிகாந்த்!…

அவரின் கடைசி படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் த டைம் மற்றும் தளபதி 69 கடைசியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பேச்சு சமீபகாலமாகவே அதிகமாக கோலிவுட் வட்டாரத்தில் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த வருடம் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்  லைக்காவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

ஆனால் அதன் பின்னர் அப்படத்தின் மற்ற முக்கிய அப்டேட்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமலே இருந்து வருகிறது. ஜேசன் சஞ்சயின் முதல் ஹீரோ விஜய் சேதுபதியாக இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. பின்னர் அப்பட்டியலில் கவின் தொடங்கி  அதர்வா முரளி என பல இளம் நாயகர்களின் பெயர் அடிபட்டது.

இதையும் படிங்க: ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போலயே? விவகாரத்துக்கான காரணம் பற்றி மனம் திறந்த சரத்குமாரின் முதல் மனைவி

இந்நிலையில் அது குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.  அதாவது  ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்து இருக்கிறதாம். அப்படத்தின் ஹீரோவாக பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பிரபல நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான். மலையாளத்தில் பிரபலமாக இருந்தாலும் தமிழிலும் தற்போது கணிசமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago