அவ்ளோதான் பொறுமை!.. பொங்கலுக்கு களமிறங்கும் விஜயின் மகன்!.. செம அப்டேட் இருக்கு!...

by சிவா |
jason
X

jason

Jason sanjay: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் விஜய். இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர்தான். அதேபோல், இவரின் படங்களும் பல நூறு கோடிகளை வசூல் செய்து வருகிறது. லியோ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது.

இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், அவரின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அந்த அறிவிப்பு வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. லியோ படத்த்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் இந்த அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க: கமல் – ஸ்ரீவித்யா காதலை நிராகரிக்க இந்த காரணம் தான் இருந்தது!… ஸ்ரீவித்யா அண்ணி சொன்ன ரகசியம்..

அதுவும், லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அவர் இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார். சிறு வயதில் விஜயுடன் சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். எனவே, அவர் ஒரு நடிகராக வருவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், எனக்கு இயக்கத்தில் ஆசை என சொல்லிவிட்டார்.

jason

jason

தற்போது லண்டனில் அம்மாவுடன் வசித்து வரும் ஜேசன் சஞ்சய் அங்கு திரைப்பட இயக்கம் பற்றிய சில படிப்புகளை படித்திருக்கிறார். நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களையும் எடுத்திருக்கிறார். அதன்பின்னர்தான் இயக்குனர் ஆவது என முடிவெடுத்திருக்கிறார். ஆனால், விஜயின் சம்மதத்தோடு அவர் இதை செய்து வருகிறாரா என்பதுதான் தெரியவில்லை.

இதையும் படிங்க: விஜயகாந்த் இல்லை!.. விஜய் லெவலே வேற.. அதுக்குத்தான் இவ்ளோ பண்றாரு.. பிரபலம் சொன்ன செம மேட்டர்!

ஏனெனில், விஜய் அவரின் குடும்பத்தினரிடமே பேசாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் ஜேசன் சஞ்சய் பட அறிவிப்பு வெளியானபோதும் அவர் மகனுக்கு வாழ்த்து செய்தியும் சொல்லவில்லை. அதோடு, மகன் மீது அவர் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வருகிற பொங்கலுக்கு ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய முக்கிய அப்டேட்டுகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி செய்தி மற்றும் படத்தின் தலைப்பு வெளியாகலாம் என கணிக்கப்படுகிறது.

Next Story