Categories: Cinema News latest news

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பேன் இந்தியாலாம் இல்லையாம் – யுனிவெர்ஸ் லெவலில் தயாராகும் ஜேசனின் படம்

Vijay’s Son Jason: தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் விஜயின் வாரிசான ஜேசன் விஜய் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே அவர் நடிகராக நடிக்கப் போவதில்லை. இயக்கத்தில் தான் ஆர்வமாக இருக்கிறார் என முன்பே ஒரு பேட்டியில் விஜய் கூறினார்.

அதற்காக வெளி நாடுகளில் தீவிர பயிற்சி எடுத்து வந்த ஜேசன் திடீரென லைக்காவின் புரடக்‌ஷனில் ஒரு படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் அதுவும் எடுத்ததுமே ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைந்திருப்பது அனைவரின் மத்தியில் பலவித கேள்விகளை எழுப்பியது.

இதையும் படிங்க: பொங்கலுக்கு சம்பவம் காத்திருக்கு… மிரட்டலாய் வெளியான அரண்மனை4 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

அப்பாவின் தலையீடு இல்லாமலா லைக்காவுடன் இணைந்திருப்பார் ஜேசன் என்று பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தன் மகன் விருப்பத்திற்கோ அல்லது அவரின் எந்தவொரு செயலுக்கோ விஜயின் தலையீடே இருக்காது. அதை விஜயும் விரும்பமாட்டார் என விஜய் வட்டாரத்தில் இருந்து பல தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் ஜேசன் இயக்கப்போகும் படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அவர் கிட்டத்தட்ட 10 மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை எடுக்கப் போகிறாராம். அதற்கு லைக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளதாம்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 34 திரைப்படம்… கமலின் வாழ்க்கையே மாற்றிய தருணம்.. யார் அந்த ஹிட் கோலிவுட் ஹீரோ?…

இதை வைத்தே ஜேசனை பிற மொழிகளிலும் அறிமுகம் செய்ய வசதியாக இருக்கும் என லைக்கா கருதியதானலேயே லைக்கா தரப்பிலிருந்து எந்தவொரு மறுப்பும் வரவில்லை என்று தெரிகிறது.

மேலும் இந்தப் படத்தின் கதை யுனிவெர்சல் தரத்திலும் அமைய இருக்கிறதாம். ஏற்கனவே ஜேசன் சினிமா பற்றிய படிப்பினை வெளி நாடுகளில் படித்து வந்துள்ளதால் அவரின் சினிமா பற்றிய பார்வையும் சற்று விசாலமானதாகவே இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: லியோவின் ட்ரைலரிலுமா கைய வைப்பீங்க.. கடுப்பில் கதறும் விஜய் ரசிகர்கள்.. அட போங்கப்பா!

Published by
Rohini