ஜவானில் அட்லி செஞ்ச வேலை.. மூடி மறச்சி வெத்து பந்தா காட்டும் ஷாருக்கான்...

Jawan movie: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி்யாளர் என்பதால் அதிக பட்ஜெட்டுகளில் படமெடுப்பவர். அதாவது பரவாயில்லை. சொன்ன பட்ஜெட்டை விட சில கோடிகளை அதிகரித்து படத்தை முடிப்பார். இதனால், தயாரிப்பாளருக்கு பெரிய லாபமே இருக்காது.
விஜயை வைத்து அவர் இயக்கிய் தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 படங்களிலும் இதுதான் நடந்தது. இந்த 3 படங்களையும் தயாரித்த தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதன்பின் படமே தயாரிக்கவில்லை. தியேட்டர் அதிபர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைத்தாலும் தயாரிப்பாளருக்கு இப்படம் நஷ்டம் என்றே சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: குறைவான பட்ஜெட்டில் பெத்த லாபம்!. சன் பிக்சர்ஸ் கல்லா கட்டிய 3 திரைப்படங்கள்…
ஆனால், அட்லி இதைப்பற்றியெல்லாம் எப்போதும் கவலைப்பட மாட்டார். புதுப்புது தயாரிப்பாளர் கிடைத்தால் படங்களை இயக்கிக் கொண்டே இருப்பார். இதுதான் அவரின் ஸ்டைல். விஜயை வைத்து 3 படங்கள் இயக்கியதால் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அட்லிக்கு வாய்ப்பு கொடுத்தார்.
அப்படி உருவான திரைப்படம்தான் ஜவான். இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனமே தயாரித்திருந்தது. சமீபத்தில் வெளியான இப்படம் ரூ.900 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக ரெட் சில்லி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், உண்மையில் இந்த படம் அவ்வளவு வசூல் பெறவில்லை என செய்திகள் உலா வருகிறது. அப்படி சொல்வதற்கு சில காரணங்கள் இருக்கிறது.
இதையும் படிங்க: எல்லாமே நடிப்பா கோபால்… பிராக்டீஸ் பண்ணிட்டு ஸ்டேஜ் ஏறும் தளபதி.. ஸ்கிரிப்ட் தான் எல்லாமே!
ஜவான் திரைப்படம் 3 வருடங்களுக்கு முன்பு துவங்கியது. கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பல மாதங்கள் தடைபட்டது. ஒரு பக்கம் சொன்ன பட்ஜெட்டை விட அதில் 50 சதவீதம் அதிகரித்து படத்தை முடித்தார் அட்லீ. அதோடு, இப்படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகளை ஷாருக்கானின் சொந்த நிறுவனமே செய்தது.
வேறு தயாரிப்பாளராக இருந்திருந்தால் கொரானா காலத்தில் வட்டி அதிகரித்திருக்கும். அதேபோல், பட்ஜெட்டில் 50 சதவீதம் அதிகரித்தது, வி.எப்.எக்ஸ் பணிகளுக்கு பல கோடிகள் பில் என எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் ஷாருக்கானுக்கு கிடைத்திருக்கும் லாபம் குறைவுதான் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: திடீரென கமல்ஹாசனை குடும்பத்துடன் சந்தித்த ரோபோ சங்கர்!.. அட அப்போ அது கன்ஃபார்ம் தான் போல!..