More
Categories: Cinema News latest news

போன மாசம் வந்த படத்தை கூடவா காப்பி அடிப்பீங்க..அட்லியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

Director Atlee: அட்லி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தன்னுடைய முதல் படமே வெற்றியாய் அமைந்த இவர் அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார்.

இவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். தனது வாழ்வில் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் விஜய்யிடம் கேட்டுதான் முடிவினை எடுப்பாராம். இவர் இயக்கத்தில் விஜய் தெறி, மெர்சல், பிகில் போன்ற பல திரைப்படங்களை நடித்துள்ளார். இப்படங்களும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தன.

Advertising
Advertising

இதையும் வாசிங்க: ஜெயிலர், பதானை தூக்கிப் போட்டு துவம்சம் பண்ண ஜவான்!.. ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா!..

இவர் இயக்கத்தில் நேற்று வெளியான படம்தான் ஜவான். இத்திரைப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோனே போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஷாருக்கான் இரு வேடங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தந்தையாக நடித்த ஷாருக்கானுக்கு தீபிகா படுகோனே ஜோடியாகவும் மகன் ஷாருக்கானுக்கு நயன் ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இத்திரைப்படம் அனைத்து தியேட்டர்களிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. வழக்கம் போல் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு படமாக இப்படம் அமைந்துள்ளது. இயக்குனர் அட்லி படங்களை பார்த்தால் சில படங்களின் காப்பி என்பது நமக்கு தெரிந்த பொதுவான விஷயம்தான். இப்படத்திலும் அப்படியான சம்பவம்தான் அரங்கேறியுள்ளதாம்.

இதையும் வாசிங்க: அடடே அவங்களா!.. ஜவான் படத்தில் நயன்தாரா குரலை கெடுக்காம பார்த்துக் கொண்ட அட்லீ!..

இப்படத்தினை பார்க்கும் பொழுது ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு படத்தினை நினைவுபடுத்துகிறதாம். இதில் நாம் சிரிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் போன மாதம் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தினை பார்த்த மாதிரியும் இருக்கிறது என படத்தினை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் பிளாஷ்பேக் கதையில் ஜெய்லராக வருவதை போல் ஷாருக்கானும் அதே தோற்றத்தில் வருவது ஜெயிலர் படத்தினை நினைவு படத்துவதாக இருக்கிறது என படத்தினை பார்த்தவர்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நயனின் நடிப்பு இப்படத்தில் மிகவும் ரசிக்கும்படி இருந்ததாகவும் விஜய் சேதுபதியும் தன்னுடைய நடிப்பினை மிக கட்சிதமாக வெளிக்காட்டியுள்ளார் எனவும் ரசிகர்கள் கருத்தினை தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்ல ஷாருக்கானும் தனது நடிப்பினை மிக சரியாக செய்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மையக்கருத்து மிகவும் நன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிங்க: அது என் கூடவே பிறந்தது! ‘ராஜாராணி’ முதல் ‘ஜவான்’ வரை கொஞ்சமும் மாறாத அட்லீ – இதுல கோட்ட விட்டீங்களே

Published by
amutha raja

Recent Posts