சென்னையில் ஜவான் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி!.. அட நம்ம தளபதி என்ட்ரியும் கன்ஃபார்ம்!.. குட்டி கதை?..

by Saranya M |   ( Updated:2023-08-29 21:16:55  )
சென்னையில் ஜவான் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி!.. அட நம்ம தளபதி என்ட்ரியும் கன்ஃபார்ம்!.. குட்டி கதை?..
X

தளபதி விஜய் ரசிகர்களுக்கு செம ஹேப்பியான செய்தியை காலையிலேயே நடிகர் விஜய் தரப்பு தாறுமாறாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளனர்.

இயக்குநர் அட்லீ பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை இயக்கி உள்ள முதல் படமான ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்ட வசூல் வேட்டையை நடத்த காத்திருக்கிறது.

இதையும் படிங்க: விரைவில் விஜய்க்குத் திருமணம்!.. காதலியை எப்படி அறிமுகப்படுத்தியிருக்காரு பாருங்க!..

ஜவான் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனை தவிர ஏகப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் தான் நிறைந்துள்ளனர் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. வில்லனாக விஜய்சேதுபதி, ஹீரோயினாக நயன்தாரா, முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி, அம்ரிதா அய்யர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த அட்லீ திட்டமிட்டுள்ளார். சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக இன்று மாலை 3 மணிக்கு ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் செஞ்ச வேலை!.. நெகிழ்ந்துபோய் சுபாஷ்கரன் என்ன செய்தார் தெரியுமா?…

அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த நடிகர் விஜய் ஜவான் இசை வெளியீட்டு விழாவுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

மேலும், ஜவான் படத்தில் நடிகர் விஜய் அட்டகாசமான கேமியோ ரோலிலும் நடித்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில், தளபதி விஜய் சென்னையில் நடைபெற உள்ள ஷாருக்கானின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்காவில் இருந்து திரும்பி விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் அஜித், தனுஷ் படம்! கைவிடப்பட்ட நிலையில் தூசி தட்டி மறுஜென்மம் கொடுத்த நம்ம மில்லர்

மேலும், நடிகர் விஜய்யின் அட்மினான ஜகதிஷ் ப்ளிஸ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக விஜய் வரப்போவதற்கான சிக்னலை கொடுத்துள்ளார். சாய்ராம் கல்லூரியில் இன்று மாலை ஜவான் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறுவதாக அறிவித்த அவர் அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். விஜய் அட்மின் எல்லா வேலைகளையும் செய்கிறார் என்றால் விஜய்யின் மெர்சல் என்ட்ரி நிச்சயம் இருக்கும் என தளபதி ரசிகர்கள் கொண்டாட்ட மோடுக்கு வந்து இன்றே ஒரு குட்டிக் கதை இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story