4 விஜய் படம் பார்த்த மாதிரி இருக்கு!.. ஷாருக்கானை தளபதியா மாற்றிய அட்லீ.. ஜவான் விமர்சனம் இதோ!
Jawan Review: ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அட்லி இயக்கிய 4 படங்களிலும் எப்படி மற்ற படங்களின் தாக்கம் இருந்ததோ அதைவிட அதிகமாக சும்மா விஜய் படங்களை அடுக்கி பாலிவுட்டின் கிங்கான் ஷாருக்கானுக்கு இந்த ஜவான் படத்தை கொடுத்திருக்கிறார்.
பாலிவுட் வாய்ப்பு கிடைத்த பிறகும் மற்ற படங்களின் சாயல் இல்லாமல் இயக்குனர் அட்லி இயக்க முடியவில்லையே என்கிற வருத்தம் படத்தைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எழத்தான் செய்கிறது.
இதையும் படிங்க: குருநாதர் ஷங்கரையே இட்லியா தூக்கி சாப்பிட்ட அட்லீ!.. தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே இப்போ இவர் தான் டாப்!
ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வழக்கம்போல தனது ஸ்டைலில் விஷுவல் மிரட்டலாக ஜவான் படத்தை கொடுத்திருக்கிறார் அட்லி. கத்தி, மெர்சல், பிகில் என ஏகப்பட்ட விஜய் படங்களின் ரெஃபரன்ஸ்களும் அஜித்தின் ஆரம்பம், மங்காத்தா படங்களையும் விஜயகாந்தின் ரமணா கமல்ஹாசனின் இந்தியன் என ஒட்டுமொத்தமாக மிக்சர் மசாலா படத்தை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
ஜவான் படத்தின் கதை என்னவென்று என்று பார்த்தால் போலீஸ் அதிகாரி ஆசாத் ஆக இருக்கும் மதன் ஷாருக்கான் சில பிரச்சனைகள் காரணமாக தன்னுடைய ஐந்து பெண்கள் டீமுடன் வில்லன் விஜய் சேதுபதியின் ஆட்டத்தை முறியடிக்க போராடுகிறார். ஒரு கட்டத்தில் மகன் ஷாருக்கானுக்கு பிரச்சனை வர இடைவேளை காட்சியின் போது அப்பா ஷாருக்கான் எப்படி என்ட்ரி கொடுத்து எதிரிகளை துவம்சம் செய்கிறார் என்பதை படு மிரட்டலாக இயக்கியிருக்கிறார் அட்லி.
இதையும் படிங்க: பாலிவுட்டில் பலித்ததா அட்லியின் காப்பி மேஜிக்!.. ஷாருக்கானின் ஜவான் படம் எப்படி இருக்கு?..
போலீஸ் அதிகாரியாக ஒரு நயன்தாரா மறைமுகமாக தனது கணவர் ஷாருக்கானுக்கு உதவி செய்வது உள்ளிட்ட காட்சிகளில் மாஸ் காட்டுகிறார். வெள்ளை தாடி எல்லாம் வைத்துக்கொண்டு விஜய் சேதுபதி இரண்டாம் பாதியில் வில்லத்தனத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. அதேசமயம் அவரது பாடல்கள் ஜெய்லர் படத்துக்கு கை கொடுத்தது போல ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு கைகொடுக்கவில்லை என்பது சற்றே வருத்தம் தான்.
பல படங்களைப் பார்த்து ஃபீலிங் வந்தாலும் தேசத்தில் தொடரும் பிரச்சனைகளை திரைக்கதையுடன் சரியாக பொருத்தி எமோஷனல் ஃபீலிங்கு உடன் கனெக்ட் செய்து இயக்குனர் அட்லி கிளாப்ஸ் அள்ளுகிறார்.
இன்னமும் புதிய திரைக்கதைக்கு மெனக்கெட்டு அட்லி இப்படி ஒரு படத்தை கொடுத்திருந்தால் மேலும் அவரை பெரிதாக கொண்டாடி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஜவான் - ஒரு முறை பார்க்கலாம்!
ரேட்டிங்: 3.5/5.