Connect with us
jayalalitha

Cinema History

சினிமாவில் நடிப்பதை ஜெயலலிதா ஏன் நிறுத்தினார் தெரியுமா?.. இவ்வளவு காரணம் இருக்கா!..

சிறுமியாக இருக்கும்போதே படிப்பில் வேற லெவலில் இருந்தவர் ஜெயலலிதா. படிப்பை முடித்துவிட்டு எழுத்தாளராக வேண்டும் எனவும் ஆசைப்பட்டார். ஆனால், அவரின் அம்மா அவரை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பினார். விருப்பமில்லா விட்டாலும் அம்மா வற்புறுத்தியதால் வேறு வழியின்றி சினிமாவில் நடிக்க வந்தார் ஜெயலலிதா. 1965ம் வருடம் வெளியான ‘வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமானார். அடுத்த படமே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார்.

1966ம் வருடம் முதல் 1970 வரை எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எடுத்தபோது அதில் ஜெயலலிதாவை நடிக்க வைக்காமல் லதா, மஞ்சுளா ஆகியோரை நடிக்க வைத்தார். இது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, 1971 முதல் 1975 வரை சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அம்மாவின் மரணம் ஜெயலலிதாவை மிகவும் பாதித்தது. மேலும், 1976ம் வருடம் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. எனவே, திரைப்படஙக்ளில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அவரின் சொத்துக்களை அபகரிக்க அவரின் உறவினர்கள் சிலர் முயன்றனர். இதை கேள்விப்பட்டு எம்.ஜி.ஆர் அவருக்கு உதவினார்.

ஜெயலலிதா கடைசியாக நடித்த திரைப்படம் ‘நதியை தேடி வந்த கடல்’. இப்படம் 1980ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சரத்பாபு ஹீரோவாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். அதன்பின் 1984ம் வருடம் அவரை முழு அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர் மாற்றிவிட்டார். அதன்பின் முழுநேர அரசியலில் மட்டுமே ஜெயலலிதா கவனம் செலுத்தினார். 17 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கி 32வது வயதில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 36 வயது முதல் 68 வயது வரை 32 வருடங்கள் முழுநேர அரசியல்வாதியாகவே வாழ்ந்து ஜெயலலிதா மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top