விஜய்க்கு தமிழில் ‘க்’ தெரியாது!.. அவரோட பையனுக்கு தமிழே தெரியாது... கலாய்த்த பிரபலம்...
தளபதி விஜய் தற்போது கட்சி ஆரம்பித்ததால் தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார். இவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம். அதில் க் என்ற எழுத்தை விட்டு விட்டதால் ஆரம்பமே அமர்க்களமான குழப்பத்தில் இருந்து வந்தது. இதற்கு பல விதங்களில் விமர்சனங்கள் எழுந்தன. தமிழை பிழையாக எழுதுபவர்கள் தமிழ் பேசும் தமிழனை ஆள்வது எப்படி என்று கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும்போதே ஏதாவது தமிழ் புலமை மிக்க தமிழறிஞரிடம் கட்சியின் பெயரைச் சொல்லி நான் வைத்த பெயரில் எழுத்துகள் சரியாக உள்ளதா? பிழை இல்லாமல் இருக்கிறதா என்று கேட்டு இருக்கலாம். ஆனால் விஜய் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் ஒருவேளை பயந்து இருக்கலாம். தமிழ் தெரிந்த நபரை உள்ளே கொண்டு வந்தால் நம்மை விட வளர்ந்து முதலிடத்திற்கு வந்து விடுவாரோ என்று பயம் வந்திருக்கலாம். பல விமர்சனங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த க் கை சேர்த்து விட்டார்கள்.
அதே போல அவரது மகன் லைகா நிறுவனத்திற்காக படம் இயக்க வந்தார். ஆனால் அது கிடப்பில் உள்ளது. இதற்கு என்ன காரணம்னா அவருக்கு தமிழ் தெரியாதாம். ஆங்கிலத்தில் தான் எல்லாத்தையும் எழுதி வருகிறார். அப்படி இருக்கும்போது திரைக்கதையை முழுமையாகக் கொண்டு வர முடியுமான்னு அந்த நிறுவனம் கேள்வி கேட்டதாம்.
விஜய்க்கு தமிழில் க் தெரியாது. அவரோட பையனுக்கு தமிழே தெரியாது. தமிழர்கள் என்ன அடிச்சாலும் தாங்குவாங்க. நாம ஆளலாம் அப்படிங்கற இடத்துக்கு அவரு வந்துருப்பார் போல. அதுக்கு இடையில கட்சிக்குள்ள இப்பவே பல பிரச்சனைகள்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இதுக்கு நடுவுல சமுத்திரக்கனி, விஜய் பற்றி குறிப்பிடும்போது தேவை ஏற்பட்டா அவரோட நான் இணைவேன்னு சொல்லிருக்காரு.
ஜெயம் ரவி விஜய் பற்றி குறிப்பிடும்போது விஜய் அண்ணா இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுன்னு சொல்லி விட்டார். அதே நேரம் விஜய் அழைத்தால் வருவீர்களா என்று கேட்டதற்கு அவரு வீட்டுக்குக் கூப்பிட்டா வருவேன்னு சொல்லி எஸ்கேப் ஆனார். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா அவரும் சினிமாக்காரர். நானும் சினிமாக்காரர். ஆனால் அவரோட அரசியல்ல இணையறதுல எனக்கு விருப்பம் இல்லைன்னு ரொம்ப சூசகமா சொன்னாராம்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.