ஜெயம் ரவி-ஆரத்தி விவகாரத்து காரணம் இதானா? முக்கிய சேதியை உடைத்த பிரபலம்

by Akhilan |
ஜெயம் ரவி-ஆரத்தி விவகாரத்து காரணம் இதானா? முக்கிய சேதியை உடைத்த பிரபலம்
X

JAYAMRAVI_AARATHI

JayamRavi: தமிழ் திரையுலகத்தில் தொடர்ந்து பிரபல ஜோடிகள் விவாகரத்து செய்து வருகின்றனர். அந்த லிஸ்டில் சமீபமாக இணைந்திருப்பது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி. திடீர் என இந்த விவாகரத்திற்கு காரணம் என்ன. ஏன் இந்த முடிவு என்பதை பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்த அவர் கூறும் போது, தமிழ் சினிமாவில் முன்னணி எடிட்டர் மோகனின் மகன் என்ற அந்தஸ்தில் இருந்தாலும், சாதாரண கலைஞர் போல கஷ்டப்பட்டு தான் அவருக்கான இடத்தை தேடி கண்டு பிடித்தவர் ஜெயம் ரவி. அவருக்கு இன்று பிறந்தநாள். அவருடைய நெருங்கிய நண்பர்களை அதற்கு வாழ்த்து சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: விஜயுக்கு அண்ணியா கேட்டப்ப நோ சொன்ன பிரபல நடிகை… ஆனா பின்னாடி நடந்து செம பிளான்…

15 வருடமாக வாழ்ந்து வந்த திருமண வாழ்க்கையை ஆர்த்தியுடன் நேற்று முறித்துக் கொண்டிருக்கிறார். இந்த விவாகரத்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சில கூட்டம் இந்த விவாகரத்துக்கும் காரணம் தனுஷ் தான் என்ற வதந்தியை பரப்பிவிட்டு இருக்கிறது. தயவுசெய்து அதை நிறுத்தி விடுங்கள்.

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் கட்டுமஸ்தான உடம்பை கொண்டு வர ஸ்டெராய்ட் எடுத்துக் கொண்டார் ஜெயம் ரவி. அதனால் அவருக்கு திடீரென உடல்நல பிரச்சினை ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டபோது உங்கள் மனதில் ஏதோ பெரிய கவலை இருப்பதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிகிறது.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. ‘மனசிலாயோ’ அச்சு அசல் இந்தப் பாடலின் காப்பி! சரக்கு அவ்ளோதானா?

ஆரத்தி பெரிய தயாரிப்பாளரின் மகள் அவருக்கு கோலிவுட்டின் நடிகைகள் நெருங்கிய தோழிகள்தான். அந்த சமயத்தில் பார்ட்டிகளில் கலந்துகொண்ட ஆர்த்தி எடுத்த புகைப்படத்தை பரப்பி அதனால் தனுஷ் மீது பழியை போடுவது சரியாக இருக்காது.

JAYAMRAVI_AARATHI

இந்த விவாகரத்து முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆரத்தி தாய் குடும்பம் தான். அவர்கள் ரவியின் கால்சீட், கதை கேட்பது என எல்லாவற்றிலும் தலையிட தொடங்கியதும் இந்த பிரச்சினை வலுக்க தொடங்கியது. அவர்கள் ஜெயம் ரவியை வைத்து தயாரித்த திரைப்படங்களும் மிக மோசமான லிஸ்டில் இணைந்தது.

இதையும் படிங்க: ராமமூர்த்தியால் கலங்கும் குடும்பம்… விஜயாவிடம் சிக்கிய மீனா.. மகன்களை கண்டிக்கும் கோமதி

தனி ஒருவன் 2க்கு கூட தேதி கொடுக்க முடியாமல் லாக் செய்து வைத்துள்ளனர். ஜெயம் ரவியை ஆரத்தி வேவு பார்த்ததாகவும் கூறப்படுகிறது. ஊட்டி படப்பிடிப்பில் நடுராத்திரியில் கால் செய்து வீடியோகால் போட்டு ரூமை சுற்றி காட்ட சொல்லி இருக்கிறார். இந்த பிரச்னை தொடர்ந்ததாம்.

இதனால் ஜெயம்ரவி மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து மோகன் அவரை உலுக்கி கேட்க விஷயத்தை உடைத்து இருக்கிறார். இதை தொடர்ந்தே இந்த விவகாரத்துக்கு செல்ல இரண்டு குடும்பமும் முடிவு எடுத்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story