ஜெயம் ரவியின் சைரன் சத்தமா ஒலித்ததா? இல்லை சங்கு ஊதியதா?.. இதோ ட்விட்டர் விமர்சனம்!

by Saranya M |   ( Updated:2024-02-15 21:22:35  )
ஜெயம் ரவியின் சைரன் சத்தமா ஒலித்ததா? இல்லை சங்கு ஊதியதா?.. இதோ ட்விட்டர் விமர்சனம்!
X

டைரக்டர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த சைரன் திரைப்படம் இன்று வெளியானது.

சைரன் படத்தின் சிறப்புக் காட்சி பிரத்யேகமாக பத்திரிகையாளர்களுக்கு நேற்று இரவு திரையிடப்பட்டது. அந்தப் படத்தை பார்த்து விட்டு விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம்.

இதையும் படிங்க: விஜய் மீது இம்புட்டு பாசமா!.. தென்காசி கோயிலில் சமுத்திரகனி சொன்ன வார்த்தை.. ரசிகர்கள் செம ஹேப்பி!

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் அவருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், சைரன் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. படம் தேறுமா? தேறாதா? என ஏகப்பட்ட குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், படம் பக்காவாக உள்ளதாக முதல் ஷோவில் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி சைரன் படத்தில் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்ல நேரிடும் நிலையில், தன்னை அந்த நிலைக்கு தள்ளியவர்களை பரோல் கிடைக்கும் வரை காத்திருந்து வெளியே வந்து எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. ஆனால், திரைக்கதையை ரொம்பவே சாதுர்யமாக உருவாக்கி ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ்.

இதையும் படிங்க: கண்ணுக்குள்ளே நிக்கிறாரே கவின்!.. ஸ்டார் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!..

ஜெயம் ரவி வயதான தோற்றத்திலும் சரி யங் லுக்கிலும் சரி ரசிகர்களை தனது நடிப்பால் கவர்கிறார். ஜெயம் ரவியுடன் போட்டிப் போட்டு இந்த படத்தில் கீர்த்தி சுரேஷும் தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்துக்கு 5க்கு 3.5 ரேட்டிங் கொடுக்கலாம் என சினிமா விமர்சகர்கள் விமர்சனங்களை அடுக்கி உள்ளனர்.

Next Story