விஜய் இடத்தை யாரு பிடிப்பா?!.. கேள்விக்கு பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே ஜெயம் ரவி!..
Actor vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லி இருப்பதால் மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சி என இரண்டு மன நிலையிலும் அவரின் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனெனில், விஜய் முதல்வராக வேண்டும் என்கிற ஆசை அவரின் ரசிகர்கள் பலருக்கும் இருந்தாலும் அவர் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டார் என சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏனெனில் அவர் திரையில் பார்த்து ரசிப்பது நடிகர் விஜயைத்தான். அவரின் நடிப்பு, காமெடி, ஆக்ஷன், துள்ளலான நடனம் ஆகியவற்றைத்தான அவர்கள் பெரிதும் ரசிப்பார்கள். விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும்.
இதையும் படிங்க: முதல்ல கல்யாணம்.. அப்புறம் ஃபர்ஸ்ட் நைட்!. விஜய் அரசியலை பங்கம் பண்ணிய மன்சூர் அலிகான்..
அதன்பின் ஒரு படத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் இயக்குனர் அவர்.. இவர் என பலரின் பெயரும் அடிபட்டு வருகிறது. அந்த படத்தை முடித்தபின் நடிப்பதை விட்டுவிட்டு 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து விஜய் தனது அரசியல் வேலைகளில் கவனம் செலுத்தவிருக்கிறார்.
அதேநேரம், கமலுக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும். கமலும் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றுதான் சொன்னார். ஆனால், மக்கள் ஓட்டுப்போடவில்லை என்றதும் மீண்டும் சினிமாவில் நடிக்கவந்துவிட்டார். அதுபோல, 2026 தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் சினிமாவில் நடிப்பார் எனவும் சினிமா பத்திரிக்கையாளர் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: எஸ்.கே.23-ல் அந்த ஹீரோயினை தேர்வு செய்தது எதற்காக? இயக்குனர் போட்ட பக்கா பிளான்…
ஒருபக்கம், விஜய் சினிமாவிலிருந்து விலகிவிட்டால் ‘அவரின் இடத்தை அடுத்து எந்த நடிகர் பிடிப்பார்?’ என்கிற டாப்பிக் ஓடி வருகிறது. சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடிப்பார்.. சிம்பு அந்த இடத்தை பிடிப்பார் என பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில், சைரன் படம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ‘விஜயை போல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா?’ என்ற கேள்வி ‘அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை’ என அவர் கூறினார். அடுத்து ‘விஜயின் இடத்தை யார் பிடிப்பார்கள்?’ என்ற கேள்விக்கு பதில் சொன்ன ஜெயம் ரவி ‘விஜய் அண்ணாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என பதில் சொன்னார்.