Connect with us
mansoor

Cinema News

முதல்ல கல்யாணம்.. அப்புறம் ஃபர்ஸ்ட் நைட்!. விஜய் அரசியலை பங்கம் பண்ணிய மன்சூர் அலிகான்..

எதைப்பற்றி கேட்டாலும் அசால்ட்டாக, அலட்டிக்கொள்ளாமல், எதைப்பற்றியும் பயப்படாமல் கருத்து சொல்பவர்தான் நடிகர் மன்சூர் அலிகான். நடன கலைஞராக இருந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர். கேப்டன் பிரபாகரன் படத்தில் இவரை வில்லனாக நடிக்க வைத்தார் விஜயகாந்த்.

முதல் படத்திலேயே அசத்தலாக நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறியவர் இவர். அந்த வீரபத்ரன் கதாபாத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாரையும் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். அதன்பின் பல திரைப்படங்களிலும் வில்லானக நடித்தார். சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.

இதையும் படிங்க: எஸ்.கே.23-ல் அந்த ஹீரோயினை தேர்வு செய்தது எதற்காக? இயக்குனர் போட்ட பக்கா பிளான்…

கடந்த சில வருடங்களாகவே காமெடி கலந்த வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். ஒருபக்கம் சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலிலும் மாட்டி வருகிறார். லியோ படத்திற்கு பின் திரிஷா பற்றி அவர் பேசியது பூதாகரமாக மாறி அவர் மன்னிப்பு கேட்கும் நிலையும் ஏற்பட்டது.

சரக்கு என்கிற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார். படம் சரியாக போகவில்லை. ஒருபக்கம் அரசியல் நடவடிக்கைகளிலும் மன்சூர் அலிகான் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தமிழ் தேசிய புலிகள் என ஒரு கட்சி துவங்கினார். இப்போது அதன் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என மாற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க: Who are we… இந்தியன் ஆர்மியோட முகம்… சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்… டீசரே மிரள வைக்குதே எப்பா!…

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் ‘தமிழர்களை எங்கு போனாலும் அடிக்கிறார்கள். தமிழக மீனவர்கள் கடலில் 3 நாட்கள் மிதந்து கொண்டிருந்தார்கள். இந்திய விமானம் போய் அவர்களை காப்பாற்றவில்லை. தமிழர்களை யாரும் கண்டுகொள்வதே இல்லை. அதனால்தான் தேசிய அளவில் தமிழர்கள் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இந்திய ஜனநாயக புலிகள் என பெயரை மாற்றி இருக்கிறேன். வருகிற 24ம் தேதி சென்னை பல்லாவரத்தில் மாநாடு ஒன்றை நடத்தப்போகிறேன். அதில், நிறைய பேச இருக்கிறேன்’ என சொன்னார்.

அப்போது ‘விஜய் அரசியல் கட்சி துவங்கி இருக்கிறார். அவருடன் இணைந்து செயல்படுவீர்களா?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன மன்சூர் ‘முதலில் கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் முதல் இரவு பற்றி பேசுவோம்’ என சொல்லிவிட்டு போய்விட்டார். எந்த அர்த்தத்தில் அவர் அப்படி சொன்னார் என்பது மன்சூர் அலிகானுக்கே வெளிச்சம்

google news
Continue Reading

More in Cinema News

To Top