More
Categories: Cinema News latest news

ஜெயிச்சாரா ஜெயம் ரவி?.. சைரன் படத்துக்காவது தியேட்டருக்கு ரசிகர்கள் வந்தாங்களா.. 2 நாள் வசூல்?

கடந்த ஆண்டு தியேட்டருக்கு நிறைய செலவு செய்து விட்டோம் என ரசிகர்கள் எல்லாம் கடுப்பாகி இந்த ஆண்டு தியேட்டர் பக்கமே தலை வைத்து படுக்காமல் தெறித்து ஓடி வருகின்றனர்.  பல வீடுகளில் கேபிள் கனெக்‌ஷன் கட் செய்து விட்டு ஸ்மார்ட் டிவியில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் என ஓடிடி பக்கம் ரசிகர்கள் ஒதுங்கி விட்டனர்.

இந்நிலையில், அவங்களுக்கு நல்லா தக்காளி தொக்கா புதிய படங்களை 4 வாரங்களில் போட்டுக்கோங்க என தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு காரணமாக 2 வாரங்களில் திருட்டுத் தனமாக ஹெச்டி பிரின்ட் டெலிகிராமில் வந்து விடுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: இந்த ஆண்டு வெளியான இத்தனை படங்கள் ஃபிளாப்பா?.. ப்ளூ சட்டை மாறன் லிஸ்ட்ல அந்த படம் தான் ஹிட்டா?

புதிய படம் வந்தால் அந்த முதல் மூன்று நாட்கள் ஓடினால் மட்டும் தான் வெற்றி என்பது போல சூழ்நிலையையே தமிழ் சினிமாவில் மாற்றி வைத்திருக்கின்றனர். 2வது வாரத்திலேயே படத்தை மொபைலில் பார்த்து விடுவதால் தியேட்டருக்கு வந்து பார்க்கும் அளவுக்கு பெரிய படங்கள் வந்தால் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகின்றனர்.

இந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜெயம் ரவியின் சைரன் 108 திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளினாலும் படத்திற்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவில்லை என்றே தெரிகிறது. முதல் நாள் 2 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய அந்த படம் 2வது நாளில் 1.73 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்!.. எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தை பாருங்க!…

பெரிதளவில் வசூல் வந்தால் தான் தயாரிப்பு நிறுவனங்கள் மாஸாக வசூல் நிலவரங்களை வெளியிடும். ஆனால், குறைவான வசூல் வந்தால் பிளாக்பஸ்டர், வெற்றி நடை போடுகிறது, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என லால் சலாம் படத்துக்கு போடுவது போலத்தான் போடுவார்கள்.

2 நாட்களில் 3.73 கோடி ரூபாய் வசூலை தான் ஜெயம் ரவி சைரன் ஈட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று 3 கோடி ரூபாய் வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Saranya M