More
Categories: Cinema History Cinema News latest news

சிவாஜிக்கு கொடுத்த வாக்குறுதி!.. நிறைவேற்றாமல் போன ஜெய்சங்கர்!..

மக்கள் கலைஞர் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ஜெய்சங்கர். 1965 ஆம் ஆண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்ததில் இருந்து ஜெய்சங்கருக்கு ஒரே ஏறுமுகம் தான். முதல் படமே வெற்றிப் படமாக அமைந்ததால் சினிமாவில் மற்றுமொரு சாம்ராஜ்யம் உருவாகி விட்டது என்றே கருதினர்.

அந்த அளவுக்கு தன்னுடைய முழு ஈடுபாட்டை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கொடுத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார் ஜெய்சங்கர். வருடத்திற்கு 10 ,15 படங்கள் வீதம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜெய்சங்கர் படம் வெளியாகும் நிலையில் இருந்தது.

Advertising
Advertising

jaysankar

அதனாலேயே வெள்ளிக் கிழமை நாயகன் என்ற பெயரும் அவருக்கு இருந்தது. தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காத நடிகராகவே ஜெய்சங்கர் வாழ்ந்து வந்தார். மேலும் அவர் நடித்த பெண்ணே நீ வாழ்க என்ற திரைப்படம். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் பி.மாதவன், ஜெய்சங்கரின் கல்லூரி தோழன் விடி. தியாகராஜன், படத்தொகுப்பாளர் தேவராஜன், ஒளிப்பதிவாளரான கர்ணன் ஆகிய மூவரும் தயாரித்திருந்தனர். படம் வெளியாகி அமோக வெற்றிப் பெற்றது.

அதனை தொடர்ந்து அந்த நால்வரும் தனித்தனியாக படம் தயாரிக்க பி.மாதவன் – முகூர்த்த நாள், விடி. தியாகராஜன் – டீச்சரம்மா படத்தொகுப்பாளர் தேவராஜன் – நீதி தேவன், ஒளிப்பதிவாளர் கர்ணன் – பெண்ணே வாழ விடுங்க ஆகிய படங்களை தயாரித்தனர். ஆனால் இந்த நான்கு படங்களிலும் ஜெய்சங்கர் ஒருவரே கதாநாயகன். அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கையை செம்மைபடுத்திய பெருமைக்குச் சொந்தக்காரராக விளங்கினார் ஜெய்சங்கர்.

jaysankar sivaji

தமிழ் சினிமாவில் இருபெரும் தூண்களாக இருந்த சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோருடன் படம் நடிக்க வேண்டும் என்ற ஆசையும்ஜெய்சங்கருக்கு இருந்தது. ஆனால் எம்ஜிஆருடன் அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் சிவாஜியுடன் நடிக்க கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு பல படங்களில் சிவாஜியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது.

இதையும் படிங்க : ஒரு படத்தோட வெற்றியைத் தீர்மானிக்கிறது எதுன்னு தெரியுமா? வெற்றிப்பட இயக்குனர் சொல்வதைக் கேளுங்க…!!!

இந்த நிலையில் சிவாஜி ஜெய்சங்கரின் நல்ல குணத்தை பார்த்து தான் ஏற்று இருந்த நடிகர் சங்க பொறுப்பை ஜெய்சங்கர் ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஜெய்சங்கரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூற ஏதோ காரணத்தினால் அந்த வாக்குறுதியை கடைசி வரை ஜெய்சங்கரால் நிறைவேற்ற முடியாமல் போனது. இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts