பிரசாந்தின் இந்த ஹிட் படம் விஜய் செய்ய வேண்டியது... இந்த காரணத்தால் தான் மிஸ் ஆகிட்டு... சீக்ரெட் சொன்ன இயக்குனர்...
பிரசாந்த் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்களில் முதலில் நடிப்பதற்கு விஜய் மற்றும் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். இருந்தும் சில காரணங்களால் அந்த வாய்ப்பு மிஸ்ஸாகியதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஜோடி திரைப்படம் 1999ம் ஆண்டு வெளியானது. இப்படத்தினை பிரவீன் காந்தி இயக்கி இருக்கிறார். இப்படத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரசாந்தின் 25வது படமான ஜோடிக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
இப்படம் உருவானதே ஆச்சரியமான விஷயம் தான். ஜோதிகா நடிப்பில் வெளியான ஹிந்தித் திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா படத்தின் பாடல்களின் ட்யூனை வைத்து தமிழில் ஆல்பம் ரெடி செய்யலாம் என்றே முடிவெடுக்கப்பட்டது. இதை ஜீவா ஒளிப்பதிவு செய்வதாகவும், பிரவீன் காந்தி இயக்குவதாகவும், ராஜூ சுந்தரம் நடன இயக்குனர் என முடிவு எடுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடந்தது.
ஆனால் பிரவீன் காந்திக்கு இப்பாடலுக்கு கதை எழுதலாம் என்ற தோன்றவே அதற்கு காதலை மையமாக வைத்து தான் ஜோடி படத்தினை ரெடி செய்து இருக்கிறார். இதை கேட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கதை ரொம்பவே பிடித்து விட படத்திற்கு மேலும் இரண்டு பாடல்களை இயக்கி கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: இந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் விஜய் 67… லோகேஷுடன் கதை இல்லையா…
தொடர்ந்து இப்படத்தின் நாயகனாக விஜயிடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம். அவரின் கால்ஷூட் கிடைக்காமல் போனது. உடனே அப்போது ஹிட் நாயகனாக இருந்த பிரசாந்த் இந்த படத்தில் ஒப்பந்தமானதாக படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். மேலும் இப்படத்தினை போல ஸ்டார் படத்திலும் முதலில் அஜித்திடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
ஆனால் அவருக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் வந்தது. அதனால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.