More
Categories: Cinema History Cinema News latest news

சோறு போட்டா போதுமா?..கேப்டன் அளவுக்கு விஜய்க்கு தைரியம் கிடையாது!.. பத்திரிக்கையாளர் கோபம்…

சினிமாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியானது உலக அளவில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. வீடியோவை ரெக்கார்டு செய்யும் கேமிராக்களின் வளர்ச்சியின் மூலம் நடிகர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்கள்.

இதனால் அமெரிக்காவில் ரொனால்ட் ரீகனில் துவங்கி தமிழகத்தில் எம்.ஜி.ஆர் வரை நடிகர்கள் அரசியலில் கால் பதிக்கும் காலம் உருவாக இந்த தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய காரணமாக இருந்தது.  சொல்லப்போனால் திரை பிரபலங்கள் அரசியலுக்கு வருவதற்கான ஒரு பாதையாக இது அமைந்தது.

Advertising
Advertising

Vijay

அதனை தொடர்ந்து நடிகர்கள் தொடர்ந்து அரசியலில் தலைவர்களாக துவங்கினர். தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.ஜி.ஆரில் துவங்கி இப்போது வரையும் நடிகர்கள் சினிமாவிற்கு வந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதே போல அரசியல் வாதிகளும் படங்களில் நடிக்கின்றனர்.

அரசியலில் ஆர்வம்:

வழக்கமாக பெரும் நடிகர்களுக்கு இருப்பது போல நடிகர் விஜய்க்கும் அரசியலுக்கு வருவதற்கான ஆசை இருந்து வருகிறது. இதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்கிற தனது ரசிகர் மன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறார்.

கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கூட மக்கள் இயக்கம் சார்பாக பலரும் தேர்தலில் நின்றதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் உலக பட்டினி தினத்தன்று மக்களுக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளார் விஜய். இது அவர் அரசியலுக்கு வருவதற்கான் ஒரு ஆரம்பமா? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

இதற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பதிலளிக்கும்போது, “பொதுவாக அரசியலுக்கு வரும் நோக்கம் உள்ளவர்கள் சமூக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசியல் ரீதியாக ஒரு அநீதி நடக்கும்போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் ஒரு போதும் விஜய் அவற்றை செய்வதில்லை. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அதையெல்லாம் செய்தார்.

ஆனால் அந்த தைரியம் விஜய்க்கு இல்லை. அப்படியான எதிர்ப்புகளை தெரிவிக்காதவரை அவர் பெரும் அரசியல்வாதி ஆவது கடினமே!.. என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிடிக்காத நடிகர்!.. கேரவான் போறேன்னு வீட்டுக்கு போய்விட்ட அஜித்!.. இப்படி எல்லாம் நடந்துச்சா!..

Published by
Rajkumar

Recent Posts