
தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர் பாரதிராஜா.. இவர் முதன் முதலில் இயக்கிய பதினாறு வயதினிலே திரைப்படம் 1977ம் வருடம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்ததோடு, தமிழ் திரையுலகையும் புரட்டி போட்டது.. ஏனெனில் முழு படத்தையும் ஸ்டுடியோவில் எடுத்துவந்த காலகட்டம் அது. ஆனால், பதினாறு வயதினிலே படத்தை முழுக்க நிஜமான இடங்களில் எடுத்தார் பாரதிராஜா. அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்..
இந்த படம் முதல் பாரதிராஜாவிடம் தொடர்ந்து பல படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தவர் கே.பாக்யராஜ். அதன்பின் நடிகர், இயக்குனர் போன்ற அவதாரங்களை எடுத்தார்.. தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது. பல திரைப்படங்களின் கதையையும் பாக்யராஜ் திருத்தியும், மெருகேற்றியும் கொடுத்திருக்கிறார். ஒரு கதை ஓரிடத்தில் நகரவில்லை என்றால் உடனே பாக்கியராஜையே அழைப்பார்கள்.. பாரதிராஜா இயக்கிய பல படங்களில் கதை விவாதங்களிலும், திரைக்கதை அமைப்பதிலும் பாக்யராஜின் பங்கு இருந்தது.
பாரதிராஜவின் இயக்கிய பதினாறு வயதினிலே படத்தில் கூட முக்கிய மாற்றத்தை பாக்யராஜ் செய்திருக்கிறார்.. அந்த படத்தில் வரும் டாக்டர் கதாபாத்திரம் ஸ்ரீதேவியை கெடுத்து விடுவது போல காட்சியை எடுக்க திட்டமிட்டிருந்தாராம் பாரதிராஜா. ஆனால் அது தவறான செண்டிமெண்ட் போல மாறிவிடும்.. படம் ஓடாது.. அவளை அடைவதற்கு அந்த டாக்டர் முயற்சி செய்கிறார்.. ஆனால் அவள் அதிலிருந்து தப்பித்துவிடுகிறார். அந்த சம்பவம் நடக்கவில்லை என்பது போல வைக்கலாம்.. மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்’ என்று பாக்யராஜ் சொல்லியிருக்கிறார். இதை பாரதிராஜா ஏற்கவில்லை.

தன்னுடைய கிளீனுக்கு வரும் ஸ்ரீதேவி மேல் கை வைத்து அவரை அடைய மருத்துவர் முயற்சி செய்யும்போது ஒருவர் இளநீர் வெட்டுவது போல காட்டியிருப்பார் பாரதிராஜா.. அதாவது இளநீரை வெட்டி திறக்கும் போது அந்த மருத்துவர் ஸ்ரீதேவியை அடைந்திருப்பார் என்பது போல காட்ட நினைத்தாராம் பாரதிராஜா. ஆனால் காட்சியை மாற்றிய பாக்யராஜ் அந்த இளநீர் வெட்டும் போது கையிலிருந்து நழுவி கீழே உருண்டு ஓடுவது போல எடுக்கலாம்.. ரசிகர்களுக்கு புரிந்துவிடும்’ என பாக்கியராஜ் சொல்லியிருக்கிறார்.
அதையும் பாரதிராஜா ஏற்கவில்லை. ஆனால், மற்ற உதவி இயக்குனர்களும் அதே கருத்தை சொன்னதால் விருப்பமில்லாமல்தான் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா.. ஆனால் படம் பார்க்கும்போது அந்த காட்சிக்கு ரசிகர்கள் கைதட்டியிருக்கிறார்கள்.. அதை பார்த்த பாரதிராஜா பாக்யராஜிடம் ‘நீ சொன்னது சரிதான்யா.. மக்கள் ரசிக்கிறாங்க’ என்று சொல்லியிருக்கிறார்.. இந்த தகவலை கே.பாக்யராஜ் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
