Connect with us
vanitha krishna chandran

Cinema News

இவராலதான் என்னால காமெடி பண்ண முடிஞ்சிது… வனிதா கிருஷ்ண சந்திரனின் சுவாரஸ்ய தகவல்…

Actress vanitha krishna chandran: தனது 13வது வயதிலேயே சினிமாவில் அறிமுகமானவர் வனிதா கிருஷ்ண சந்திரன். இவர் பாதை மாறினால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது குழந்தைபருவம் முதலே சினிமாவின் மீது நாட்டம் கொண்டவர்.

சினிமா கதாபாத்திரங்களை போலவே தானும் நடிப்பது என சினிமா மீது மிக ஆர்வத்துடன் இருந்துள்ளார். பின் இவரின் ஆர்வத்தை கண்ட இவரின் பெற்றோர்கள் சினிமாவில் நடிக்க ஒத்துகொண்டனராம். இவர் மலர்களே மலருங்கள், கழுகு, ஆயிரம் முத்தங்கள் என கிட்டதட்ட 180 படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க:ஏலேய்! ஒன்னு இருந்தாலே முடியாது… இதுல நாலு சேந்தா!! தரையில நடந்தத திரையில காட்ட போறாங்களாமே!

மேலும் சின்னதிரையில் சில காலம் வலம் வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகிய கல்யாணபரிசு2 நாடகத்தில் இவர் நடித்திருந்தார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்த இவர் தெலுங்கு சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இதற்கு இவரின் உயரம்தான் காரணமாம்.

குள்ளமான அழகான பெண்ணாக இருக்கும் இவரும் Y.G.மகேந்திரனும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் மற்றும் மகேந்திரன் இணைந்த திரைப்படங்கள் மக்களை பெரிதளவில் ஈர்த்தது. அடுக்கு மல்லி என்ற திரைப்படத்தில் மகேந்திரனுக்கு சகோதரியாக இவர் நடித்திருந்தார். ஆனால் அப்போது வனிதாவிற்கு காமெடி வரும் என அவருக்கே தெரியாதாம்.

இதையும் படிங்க:பப்ளிசிட்டி தேடுவதில் தலைவரும், சிஷ்யனும் ஒன்னுதான்!.. மீண்டும் ரஜினியை சீண்டும் புளுசட்ட மாறன்….

பின் சிம்லா ஸ்பெஷல் திரைப்படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தில்தான் இவர்களின் காம்போ வெற்றி பெற்றது. இப்படத்தில் நடிக்கும் பொழுது மகேந்திரன் வனிதாவிடம் “நீ அழுகிற படங்களில் நடிப்பதை விட காமெடி படங்களில் நடிக்கலாம். அக்கதாபாத்திரம் உனக்கு நன்றாக பொருந்தும்” என கூறியுள்ளார்.

அதைபோல் சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது அதற்கு சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் வந்துள்ளார். அப்போது வனிதா மேடையில் நாடகம் நடித்துள்ளார். அதனை பார்த்த கமல்ஹாசனும் உங்களுக்கு காமெடி நன்றாக வருகிறது. அந்த மாதிரியான படங்களில் நடித்தால் இன்னமும் நன்றாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு பல நட்சத்திரங்கள் கூறியதால் தனது கதாபாத்திரம் காமெடி காட்சிகளுக்கும் பொருந்தும் என எண்ணி காமெடி படங்களிலும் நடித்துள்ளார் நடிகை வனிதா கிருஷ்ணா சந்திரன்.

இதையும் படிங்க:தலைவரோட அடுத்த படக்கதை இப்படித்தான் இருக்குமாம்!… மனைவிக்கு ஆப்பு அடிக்காம இருந்தா சரிதான்…

google news
Continue Reading

More in Cinema News

To Top