malleswari

திரைப்பட நடிகை காதல் மல்லேஸ்வரி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக உதவி கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘காதல்’, ‘வாத்தியார்’, ‘அரவான்’ போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை காதல் மல்லேஸ்வரி. இவர் தற்போது கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கென யாரும் துணையில்லாத நிலையில், தனது மருத்துவச் செலவுகளுக்காக திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும் உதவி வேண்டி அவர் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில், “என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி என சினிமாவில் அழைப்பார்கள். ‘காதல்’ படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நடித்திருந்தேன். இதுவரை நான் தமிழ், தெலுங்கு என சுமார் 40 படங்களில் நடித்துள்ளேன் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தன்னால் மூச்சு விடுவதற்கே சிரமப்படுவதாகவும், தாராளமான உள்ளம் கொண்டவர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்யுமாறும் அவர் அந்தக் காணொளி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.