ஏன்.. நீங்க இதை செய்ய மாட்டீங்களா?!.. மோகனிடம் கோபப்பட்ட கலைஞர்....

பெங்களூரில் நண்பர்களோடு சேர்ந்து ஜாலியாக நாடகத்தில் நடித்து வந்தவர்தான் நடிகர் மோகன். இவரை பாலுமகேந்திரா கன்னடத்தில் இயக்கிய கோகிலா படத்தில் கமலுடன் நடிக்க வைத்தார். தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே படம் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் பயணங்கள் முடிவதில்லை எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.
ஹீரோயிசம் செய்யாமல் குடும்ப கதைகள், காதல், வில்லன் என பல வெரைட்டியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். கதை மற்றும் கதாபத்திரம் பிடித்தல் போதும். நடிக்க சம்மதித்து விடுவார் மோகன். பீக்கில் இருக்கும்போதே நூறாவது நாள், விதி போன்ற படங்களில் நெகட்டிவ் வேடத்தில் நடித்தவர் மோகன்.
இதையும் படிங்க: விஜயகாந்திடம் இருந்த ஒரு விஷயம்! நம் யாரிடமும் இதுவரை இல்லை.. சூப்பரா சொன்ன மோகன்
80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்த மோகன் தனது கேரியரில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். பல வெள்ளி விழா படங்களை கொடுத்ததால் வெள்ளிவிழா நாயகன் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது. பல புதிய இளம் இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர் இவர்.
ரஜினி, கமல் ஆகியோர் பீக்கில் இருந்தபோது மோகனின் திரைப்படங்கள் அவர்களின் படங்களுக்கு போட்டியாக வெளிவந்து நல்ல வசூலை பெறும். மோகனின் எல்லா படங்களுக்கும் குரல் கொடுத்தவர் பாடகர் சுரேந்தர். ஆனால், ஒருகட்டத்தில் ‘என்னால்தான் மோகன் படங்கள் ஓடுகிறது’ என சொல்லி மோகனின் சம்பளத்தில் பாதியை அவருக்கு கொடுக்க சொன்னார். இதனால் எழுந்த சண்டையில் ‘இனிமேல் மோகனுக்கு நான் டப்பிங் கொடுக்க மாட்டேன்’ என அவர் சொல்லிவிட்டார்.
இதையும் படிங்க: இயக்குனர்களை இப்படி தேர்ந்தெடுத்தே ஹிட் படங்களை கொடுத்தேன்!.. சீக்ரெட் ஆப் சக்சஸ் சொல்லும் மோகன்!…
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய மோகன் ‘நான் நடிக்க வந்த புதிதில் நீங்களே டப்பிங் பேசிவி்டுங்கள் என என்னிடம் யாரும் கேட்கவில்லை. எனவே, நானும் அமைதியாக இருந்துவிட்டேன். சுரேந்தருடன் பிரச்சனை ஏற்பட்ட போது கலைஞரின் கதை, வசனத்தில் பாசப்பறவைகள் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
அந்த படத்தில் எனக்கு யார் குரல் கொடுப்பது என்கிற பேச்சு வந்தபோது ‘ஏன் நீங்கள் பேச மாட்டீங்களா?’ என கோபமாக கேட்டார் கலைஞர். ‘நானே பேசுறேன் சார்’ என சொல்லி அப்படத்தில் டப்பிங் பேச துவங்கினேன். அதன்பின் நான் நடித்த எல்லா படங்களிலும் நானே பேசினேன். இது கலைஞர் ஐயாவின் ஆசிர்வாதம்’ என மோகன் பேசினார்.