ரஜினிக்கு இவ்வளவோ கஞ்சத்தனம் ஆகாதுப்பா… இந்த விஷயத்துல கமல், அஜித்லாம் க்ரேட்ல!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் தற்போது 200 கோடியை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்த படங்கள் ஹிட்டானால் அவரின் சம்பளம் மேலும் பல கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் ரஜினி இந்த ஒரு விஷயத்தினை செய்யாதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அண்ணாத்த படத்தின் மிகப்பெரிய தோல்வியை அடுத்து ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாக இருந்த ஜெய்லர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதே நேரத்தில், ஒரு ப்ளாப்பால் ரொம்பவே அசிங்கப்பட்டு நின்றார் நெல்சன் திலீப்குமார். அதனால் அவருக்கும் ஜெய்லர் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என பலரும் விரும்பினார்.

இதையும் படிங்க: கோபத்தில் எட்டி உதைத்த அஜித்! ‘நான் கடவுள்’ படத்தின் போது ஏற்பட்ட மோதல் – இதுதான் நடந்ததா?

இத்தனை எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ஜெய்லர் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. வசூல் கிட்டத்தட்ட 800 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த வெற்றியால் ரஜினியும் ஹாப்பி மோடில் இன்னும் சில படங்களில் நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்.

தனக்கு பல வருடம் கழித்து மிகப்பெரிய வெற்றி படத்தினை கொடுத்த ரஜினி தன்னுடைய இயக்குனர் நெல்சனுக்கு எந்த பரிசும் கொடுக்கவில்லை. ஆனால் கமல் விக்ரம் பட வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு கார் கொடுத்தார். அட என்னப்பா அது அவரோட ப்ரோடக்‌ஷன் கம்பெனி. அதனால லோகேஷ் கார் கொடுத்திருக்கலாம் என நினைக்கலாம்.

இதையும் படிங்க: சல்லி காசு தரமாட்டோம்!.. ஜேசன் சஞ்சயை லைக்கா டிக் செய்ததன் பின்னணி!.. அதான பாத்தோம்!...

ஆனால் அஜித் கூட தன்னுடைய இயக்குனர் சரண், எஸ்.ஜே.சூர்யாவிற்கு கார் கொடுத்தனர். அஜித் கார் கொடுத்த போது அவரின் ப்ரோடக்‌ஷன் கம்பெனி இல்லையே. தனக்கு வெற்றி கொடுத்த இயக்குனருக்கு தன்னால் முடிந்த பரிசை கொடுத்து சந்தோஷப்படுத்த நினைத்து இருக்கிறார்.

நெல்சன் செய்ததற்கு ரஜினிகாந்த் எதுவும் செய்து இருக்கலாம். கார் இல்லாவிடிலும் வெற்றிவிழாவில் எதுவும் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு கஞ்சத்தனம் ஆக கூடாது ரஜினி சார்.

 

Related Articles

Next Story