Cinema News
கமலுக்கும் இவருக்கும் இப்படி ஒரு பஞ்சாயத்து நடந்திருக்கா? அதான் படம் டிராப்பா? மிஷ்கின் சொன்ன சீக்ரெட்
தமிழ் சினிமாவில் எளிய கதைகள் , காட்சிப்படுத்தலுக்கான இயக்குனர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் இயக்குனர் மிஷ்கின். சமீபகாலமாக தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் அனைவரையும் மிரள வைத்து வருகிறார். விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் மிஷ்கின்.
அதுபோக ஏகப்பட்ட படங்களிலும் கமிட் ஆகி மிகவும் பிஸியாக இருக்கிறார். ஒரு பக்கம் ஏகப்பட்ட கதைகளையும் வைத்துக் கொண்டு இயக்கும் பணியிலும் ஆயத்தமாகி வருகிறார். இவரின் இயக்கத்தில் பிசாசு 2 படம் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. மேலும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இவரின் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை படங்களுமே ரொம்பவும் வித்தியாசமானவை. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்கள் இவரின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் படங்களாகவே அமைந்தன.
இதையும் படிங்க : உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்ல! மரண அடி – பொது வெளியில் குத்து வாங்கிய நடிகர்கள்
இந்த நிலையில் கமலை வைத்து படம் எதுவும் இயக்க வாய்ப்பிருக்கிறதா என மிஷ்கினிடம் கேட்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு முன்பாகவே கமல், மிஷ்கின் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்ததாம். பிரியட் படமாக அமைய இருந்த இந்தப் படம் புத்தரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த படமாக அமைய இருந்ததாம்.
500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் படம் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம். ஆனால் படம் டிராப் ஆனது நல்லது தான் என மிஷ்கின் சொல்லியிருக்கிறார். மேலும் அந்தப் படத்தை மீண்டும் எடுக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அதற்கான பொறுமையும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஒரு வேளை எடுக்கும் திட்டத்தில் இருந்தால் அந்த படத்தில் விஜயை நடிக்க வைக்க ஆசை என்றும் கூறியிருக்கிறார் மிஷ்கின்.
இதையும் படிங்க : நடிகைகள் நடிக்க மறுத்த ஐந்து மாஸ் திரைப்படங்கள்!!.. இவங்க நடிச்சிருந்தா கூட நல்லா தான் இருந்திருக்கும்!!..