Kamal: முழுநேர அரசியல்வாதி எவனும் இல்லை... விஜயைச் சாடுகிறாரா கமல்?

vijay and kamal
நடிகர் விஜய் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ளார். அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் முன்னரே தெரிவித்து இருந்தார். எச்.வினோத் இயக்கி வரும் இந்தப் படம் 2025ன் கடைசியில் வெளியாகும் என்று தெரிகிறது.
விஜய் வாழ்த்து
Also read: Kanguva: கங்குவா அட்வான்ஸ் புக்கிங்குக்கு வந்த சிக்கல்!. எப்பா 2 ஆயிரம் கோடி பாத்து பண்ணுங்கப்பா!..
தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த விஜய்க்கு கலவையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்தன. குறிப்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இவரை ரொம்பவே வறுத்து எடுத்தார்.
இருந்தாலும் அவரது பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதே நேரம் கமலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவில்லை. இது ஊடகங்களில் பேசுபொருளானது.
மக்கள் நீதி மய்யம்

kamal
அந்தவகையில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் தீவிரமாகக் கட்சிப்பணிகளில் ஈடுபட்டார். தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அரசியலில் இருந்து கொண்டு சினிமாவில் நடிக்கிறீர்களே என கமலிடம் பலரும் கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
என்னங்க மறுபடியும் சினிமா நடிக்கப் போயிட்டாருன்னு கேட்குறாங்க... பின்ன என்ன கோட்டையில போயி கஜானாவ திறந்து பணம் எடுப்பேனா? வேலைக்குத் தான் போய் ஆகணும். ஒரு கூட்டம் நடத்தணும்னா காசு வேணும். உங்கக்கிட்ட இருக்கா? எவ்வளவு இருக்கு? சரி எங்கிட்ட இவ்வளவு இருக்கு. போட்டு நடத்துங்க கூட்டம். அப்படித்தான் நடக்குது இந்தக் கூட்டங்கள் எல்லாம்.
ரெய்டு விடுறீயா விடு
அதனால தான் என்னால சொல்ல முடியுது. ரெய்டு விடுறீயா விடு. அப்படின்னு சொல்றதுக்குக் காரணம் அந்தத் தைரியத்துல தான் சொல்றேன். அந்தத் தைரியம் தொடரும். அப்படின்னா நான் வேலை செய்யணும். நான் சினிமாவுக்குப் போறதை கேவலமா பேசுறாங்க. நீங்க முழுநேர அரசியல்வாதி இல்லைங்கறாங்க.
முழுநேர அரசியல்வாதி
ஏங்க அரசியல்வாதி எல்லாம் உட்கார்ந்து சீட்டாடற போட்டோ எல்லாம் நான் பார்த்திருக்கேன். அந்த நேரத்துல என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க. பெரிய பெரிய தலைவர்கள் சீட்டு ஆடுறதையும், டின்னர் சாப்பிடுறதையும் பார்த்திருக்கேன். அப்ப முழுநேர அரசியல்வாதி எவனுமே இல்லை என்று பெரியார் சொன்னதுதான் கரெக்ட் என்று தெரிவித்துள்ளார்.

vijay
அந்த வகையில் முழுநேர அரசியல்வாதி ஆகப்போவதாக சமீபத்தில் சொல்லிக் கொண்டிருந்தவர் விஜய் என்பதால் அவரைத் தாக்கிப் பேசியுள்ளாரோ என்றும் நெட்டிசன்கள் பலரும் கமல் பேசிய ரீல்ஸ் வீடியோ போட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் எனக்கு உலகநாயகன் உள்பட எந்தப் பட்டமும் தேவையில்லை. என்னைக் கமல் என்று அழைத்தால் போதும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.