Connect with us
Kamal23

Cinema History

உலகநாயகனையே கெஞ்ச வைத்த பாலிவுட் நடிகர்… அப்பவே இவ்ளோ சம்பவம் நடந்திருக்கா?

தமிழ்த்திரை உலகில் பன்முகத்திறமை கொண்டவர் கமல். அவரது படங்களில் நாயகன், மூன்றாம்பிறை, ஹேராம் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றன.

1992ல் வெளியான தேவர் மகன் படம் செம மாஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் படத்தைப் பற்றி இன்னொரு சுவையான தகவல் உண்டு. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் உலகநாயகன் கமல் திலீப் குமாரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அவரோ படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ஒரு பிரபல இதழுக்குப் பேட்டி கொடுத்தார் கமல். நடிகர்களுடன் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் மிஸ் பண்ணிய நடிகர் ஒருவர் உண்டு. அவர் தான் திலீப் குமார். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன்.

நான் உண்மையில் திலீப் சாப்பின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினேன். ஆனால் அவர் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார். அவரையும், என்னையும் வைத்து தேவர் மகன் படத்தை எடுக்க நினைத்தேன். அந்தப் படத்தில் அவர் நடிக்க விரும்பாததால் அதை வேறொரு நடிகருக்கு மாற்றினேன். அந்தப் படத்தில் அனில் கபூர், அம்ரிஷ் பூரி நடித்தனர்.

Kamal, Dhilipkumar

Kamal, Dhilipkumar

தமிழில் தேவர்மகன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி, ரேவதி, கௌதமி மற்றும் நாசர் உள்பட பலர் நடித்தனர். பிரியதர்ஷன் இயக்கத்தில் விராசத் என்ற இந்திப் படம் வெளியானது. இதில் அனில்கபூர், அம்ரிஷ்பூரி, தபு, பூஜாபத்ரா, மிலிந்த் குணாஜி, கோவிந்த் நாம்தியோ உள்பட பலர் நடித்தனர்.

1997ல் அதிக வசூல் செய்த பாலிவுட் படங்களில் ஒன்று இது. 43வது பிலிம்பேர் விருதுகளில் 16 பரிந்துரைகளைப் பெற்றது இந்தப் படம் தான். இந்தப்படத்தில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் படத்திற்கு கதை எழுதியவர் நம்மவர் கமல்ஹாசன் தான்.

google news
Continue Reading

More in Cinema History

To Top