ஹாலிவுட்டிலிருந்து ஆட்டைய போட்ட ஆண்டவர்... அந்த ஹிட் படம் எந்த படத்தின் காப்பி தெரியுமா?!..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல திரைப்படங்கள் ஹாலிவுட்டிலிருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டிக்கிறது. அதேநேரம், அந்த கதையை அப்படியே எடுத்தால் பிரச்சனை வரும் என்பதால் அதன் மையக்கதையை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் திரைக்கதையை மாற்றிவிடுவார்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இது நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர் கூட பல ஹாலிவுட் படங்களின் கதையை எடுத்து திரைக்கதையை மாற்றி தமிழில் நடித்திருக்கிறார். உதாரணத்திற்கு ஏவிஎம் தயாரிப்பில் அவர் நடித்த ‘அன்பே வா’ படம் கூட 1961ம் வருடம் ஹாலிவுட்டில் வெளிவந்த Come Septermber என்கிற படம்தான்.
இதையும் படிங்க: ஷங்கருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையே பனிப்போரா? மீண்டும் இணையுமா இந்த வெற்றிக்கூட்டணி?
தமிழில் மணிரத்தினம், ஷங்கர், சங்கர், முருகதாஸ் என பல இயக்குனர்களும் ஹாலிவுட் படங்களை இன்ஸ்பிரேசனாக வைத்து சில படங்களை இயக்கியுள்ளனர். கமல்ஹாசன் இவர்களுக்கு முன்னோடி. காட் ஃபாதர் எனும் ஹாலிவுட் படத்தை வைத்துதான் தேவர் மகன் படத்தை எடுத்தார்.
மகளுக்காக கதாநாயகன் வயதான பெண் போல வேஷமணிந்து மாமனார் வீட்டிற்கு வேலைக்கு போகிறான் என்பது கூட ஹாலிவுட்டில் இருந்து சுட்டதுதான். ஆனாலும், தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்து, நகைசுவை காட்சிகளை சேர்த்து அவ்வை சண்முகியில் அதகளம் செய்திருப்பார்.
இதையும் படிங்க: சீரியஸான சீனில் வசனத்தை மாற்றி சொன்ன நடிகர்.. விஜய் அடித்த கமெண்ட்.. செம நக்கல்தான்!..
அதேபோல், கமல், ஜெயராம், யோகி சேது, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் என பலரும் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பஞ்சதந்திரம் படமும் ஹாலிவுட்டில் இருந்து சுட்டதுதான். 1998ம் வருடம் வெளிவந்த Very Bad Things என்கிற படத்தின் கதை. ஆனால், சீரியஸான அந்த கதையை கிரேஸி மோகனை வைத்து காமெடியாக மாற்றியிருப்பார் கமல்.
அதேநேரம், என்னதான் ஹாலிவுட்டிலிருந்து கதையை சுட்டாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றார் போல் திரைக்கதையை மொத்தமாகி ரசிகர்களை கமல் ரசிக்க வைத்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: சீரியஸான சீனில் வசனத்தை மாற்றி சொன்ன நடிகர்.. விஜய் அடித்த கமெண்ட்.. செம நக்கல்தான்!..