More
Categories: Cinema History Cinema News latest news

ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை வெறுப்பேத்திய கவுண்டமணி…! மன்னிப்பு கேட்க சொன்னா மானத்தையே வாங்கிட்டாரே!

Goundamani: லொள்ளு பிடிச்ச ஆள் என்றால் அது கோலிவுட்டில் கவுண்டமணிக்கு தான் முதலிடம். தான் யாரை பேசுகிறோம். அவர்கள் லெவல் என்ன எதையுமே யோசிக்காமல் தனக்கு தோணியை அடித்து விடுவார். இருந்தாலும் அவர் மீது கோலிவுட் பிரபலங்களுக்கு பாசம் மட்டும் குறையாது. 

பெரும்பாலும் யாரிடமும் வம்புக்கு போகாத கமலையே கடுப்பாக்கி ஷூட்டிங்கினை விட்டே கிளம்ப வைத்து இருக்கிறார். அது செந்தில்-கவுண்டமணியின் ஆட்சி அதிகமாக இருந்த சமயம். கமலின் சிங்கார வேலன் படத்தில் கவுண்டமணி மட்டும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: மீண்டும் கில்லி த்ரிஷாவா… அப்படியே இருக்கே… வைரலாகும் லியோ போஸ்டர்..!

ஒருமுறை ஷூட்டிங் நடந்த போது கவுண்டமணியை காண வந்த ரசிகர் என்ன அண்ணே நீங்க மட்டும் நடிக்கிறீங்க? செந்தில் ஏன் நடிக்கல? உங்க காம்போ தான் நல்லா இருக்கும் எனக் கேட்டார். அதற்கு கவுண்டமணி அட என்னப்பா இந்த படத்திலையும் ஒரு வெள்ளை செந்தில் இருக்கார். அவர் பெயர் கமல்ஹாசன் எனக் கூறிவிட்டாராம். இதனை அருகில் சென்று கொண்டு இருந்த கமல்ஹாசன் கேட்டுவிட்டார்.

எப்படி நம்மை சொல்லலாம் என்ற கோவத்தில் அந்த இடத்தினை விட்டு வெளியேறி போய்விட்டார். சிங்கார வேலன் படத்தினை தயாரித்தது இளையராஜாவின் பாவலர் கிரியேஷன் தான். அதனால் வீட்டுக்கு வந்தவுடன் இளையராஜாவிடம் கால் செய்து சொல்லி அவர் மன்னிப்பு கேட்டால் தான் ஷூட்டிங் போவேன் எனவும் கூறிவிட்டார்.

இது ஷுட்டிங்கில் இருந்த கவுண்டமணிக்கு செய்தி போக என்ன மன்னிப்பு தான கேட்கணும். கேட்டா போச்சு எனக் கூறி கமலை வரச்சொல்லி விடுகிறார். அன்று பொதுவெளியில் நடந்த ஷூட்டிங் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் சுற்றி நிற்க கமல் வந்து இறங்குகிறார்.

இதையும் படிங்க: தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்! ‘லியோ’ டிரெய்லரை பார்த்து பிரமிப்பில் பிரபலம் போட்ட ட்விட்

கவுண்டமணி அருகில் சென்று கமல் உங்களை நான் வெள்ளை செந்திலுனு சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க என திரும்பி திரும்பி சொல்ல அங்கிருந்தவர்களே சிரிக்க தொடங்கிவிட்டார்களாம். மன்னிப்பு கேட்க தான் வரசொன்னாரு. இப்படி மானத்தினை வாங்கிவிட்டாரே என கமலே விடுங்கண்ணே என ஷூட்டிங் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan