Connect with us
leo

Cinema News

தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்! ‘லியோ’ டிரெய்லரை பார்த்து பிரமிப்பில் பிரபலம் போட்ட ட்விட்

Leo Trailer: இன்னும் சிறிது நேரத்தில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. ஆனால் எந்த நேரத்தில் வெளியிடப்படுகிறது என்பதை பற்றி இன்னும் சொல்லாமல் படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. உலகளாவிய விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளாக இன்று அமைந்திருக்கிறது.

அந்தளவுக்கு லியோ திரைப்படம் பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அவர்களுடன் இணைந்து அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் போன்றோரும் நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் கில்லி த்ரிஷாவா… அப்படியே இருக்கே… வைரலாகும் லியோ போஸ்டர்..!

இன்று த்ரிஷா சம்பந்தப்பட்ட லியோ போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில் த்ரிஷாவின் தலையை யாரோ வெட்ட வருவது போல காட்டப்பட்டுள்ளது. புகைப்படம் முழுவதும் ரத்தக்கறையாக வேற இருக்கிறது.

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இது கன்ஃபார்மா ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸேதான் என்று சொல்கிறார்கள். எப்படிப்பட்ட கதை என படம் வெளியான பிறகே நமக்கு தெரியவரும். இந்த நிலையில் இன்று லியோ படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கும் நிலையில் லியோ படத்தில் வசனகர்த்தாவாக இருக்கும் தீரஜ் வைத்தி ஒரு பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கிணத்தயே மறைச்சிருக்காங்கே! ‘லியோ’வில் மெயின் வில்லனே இவர்தானாம்! ஆண்டவரே இதுக்குத்தானா?

அதாவது லோகேஷுடன் இணைந்து லியோ படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டேன் என்றும் தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும் என்றும் பதிவிட்டிருக்கிறார். அதாவது லியோ படத்தின் டிரெய்லரை பார்க்கும் போதே நம் தாடைகள் எல்லாம் தரையில்தான் இருக்குமாம்.

அந்த அளவுக்கு ஒரு த்ரில்லிங்கான கதையாக இருக்கும் என்று சொல்லவருகிறார். நம்மை அறியாமலேயே நம் தாடைகளை தரையில் வைத்து பார்ப்போம் என்று இதன் பொருள். மேலும் தளபதியும் சும்மா வெறித்தனமா இருக்காரு என்றும் கூறியிருக்கிறார். எப்படி இருக்கிறார் என்பதை கூடிய சீக்கிரம் பார்க்கத்தான் போகிறோம்.

இதையும் படிங்க: சம்பளமே முக்காவாசி முழுங்கிட்டா படத்த எப்படி எடுக்க?!.. தலைவர் 170, தளபதி 68-ல் நடப்பது இதுதான்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top