Cinema History
விஜய் ரசிகர்களை விட மோசமால இருக்காங்க கமல் ஃபேன்ஸ்… பிரபலத்தையே அசிங்கப்படுத்திய நிகழ்வு..!
Vijay fans: விஜய் ரசிகர்கள் சமீபத்தில் லியோ படத்தின் ட்ரைலரை தியேட்டரில் ரிலீஸ் செய்த போது பிரபல தியேட்டரின் சீட்களை உடைத்து நாசமாக்கிய சம்பவம் பலரிடத்திலும் வைரலாக பேசப்பட்டது. விஜய் ஃபேன்ஸ் குறித்து பல சர்ச்சை கருத்துகள் வெளியானது.
ஆனால் விஜய் ரசிகர்களை விட கமல் ரசிகர்கள் ரொம்பவே கோபமான ஆட்கள் என்பதற்கு ஒரு உதாரணமான நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது. கமல் ரொம்ப வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் அவர் நாயகனாக நடிக்கும் பட வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. மிகப்பெரிய போராட்டத்துக்கு பின்னரே கோலிவுட்டில் நடிகரானார்.
இதையும் படிங்க: ஹீரோயின்ஸ் பாத்தா கொத்திட்டு போய்டுவாங்க!.. லண்டனில் ஸ்டைலீஸ் லுக்கில் ஊர் சுற்றும் சிம்பு!..
அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்து பெரிய இடத்தினை பிடித்தார். 80களின் இறுதியில் கமல்ஹாசனுக்கு பெரிய ரசிக கூட்டமே குவிய தொடங்கினர். அப்போ கமலுக்கு பெரிய ஆர்வம் எழுத்தாளர் ஜெயகாந்தனை பார்க்க ஆசை. சினிமாவில் மட்டுமல்லாமல் எழுத்திலும் ஆர்வம் இருந்ததால் அவருக்கு இந்த ஆசை உதித்து இருக்கிறது.
ஒருநாள் ஜெயகாந்தனை காண கமல்ஹாசன் செல்கிறார். அவரை காண பலதரப்பட்ட மனிதர்களும் காத்து இருக்க கமலும் அங்கையே வெயிட் செய்கிறார். அப்போ கமல் ஜெயகாந்தனிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு என்னோட நற்பணி மன்ற விழாவிற்கு அழைப்பு விடுக்கிறார்.
ஜெயகாந்தன் நான் ஏன் வரணும் எனக் கேட்க, என் ரசிகர்கள் நிறைய நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார்கள். ரத்த தானம் உள்ளிட்ட சமூகத்துக்கு பல சேவைகளை செய்தவர்கள் 10வது ஆண்டாக நற்பணி மன்ற விழா நடைபெறுகிறது என அவர் சொல்ல ஜெயகாந்தனும் வருவதாக கூறிவிட்டார்.
இதையும் படிங்க: கழட்டிவிட்ட ரஜினி!. கை கொடுத்த சிம்பு!.. உலக நாயகன் உள்ள வந்தது இப்படித்தான்!..
நிகழ்ச்சி அன்று விழா கோலாகலமாக நடந்து வந்தது. ஜெயகாந்தன் மேடையில் கமல் அருகில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த போது, என் தலைவர் முன்னாடியே கால் மேல் போட்டு உட்காருறீயா? எறக்குடா காலை என சத்தம் வருகிறது.
ஆனால் அந்த சத்தம் வந்த போது ஜெயகாந்தன் மேலும் நல்லா கெத்தாக உட்கார்கிறார். மேலே வந்தா மவனே பிச்சிடுவேன் என இன்னமும் சத்தம் வருகிறது. இதில் கமல்ஹாசன் பதறியே விடுகிறார். உடனே மைக்கை பிடித்து அந்த சத்தமிட்டவர் உடனே மேடைக்கு வந்து மன்னிப்பு கேட்க சொல்லியே விட்டார். அதை தொடர்ந்தே பெரும்பாலான எழுத்தாளர்கள் சினிமா மேடைக்கு வருவதை தவிர்த்தனராம்.