இன்னா ஸ்பீடு!.. இந்தியன் 2 டப்பிங்கை ஆரம்பித்த கமல்ஹாசன்!.. ரஜினியோட மோத போறாரா?.. வீடியோவை பாருங்க!..

இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில், இந்த ஆண்டு வெளியாகி விடும் என ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு கூட இந்தியன் 2 வெளியாகாது என்கிற நிலைமை தான் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சம்மர் அல்லது ஆகஸ்ட் 15ம் தேதி தான் இந்தியன் 2 வெளியாகும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் என இரு படங்களையும் ஒரே நேரத்தில் எடுக்கிறேன் என ஷங்கர் இரண்டு படங்களையும் தாமதமாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: இதை ஓபனாவே சொல்லிடலாமே!.. துருக்கியில் ரகசியமாக ராஷ்மிகா யாருடன் டூர் அடிக்கிறாரு பாருங்க!..

இப்போதைக்கு இந்தியன் 2 பற்றிய எந்தவொரு அப்டேட்டும் வராது என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி விட்டதாக வீடியோவை வெளியிட்டு தற்போது அதகளம் செய்து வருகின்றனர்.

டப்பிங் ஸ்டூடியோவிற்கு உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் வந்த வீடியோ காட்சிகளும், டப்பிங் தியேட்டரில் இருவரும் பேசிக் கொண்டு டப்பிங் பணிகளை சிரித்து மகிழ்ந்தபடி அரங்கேற்றும் பணிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தொப்பி போட்டுக் கொண்டு இந்தியன் தாத்தா இருக்கும் ஒரே ஒரு சின்ன ஷாட் மட்டுமே அந்த வீடியோவில் ரசிகர்களுக்காக ரிவீல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சிவாஜிக்கே நடிப்பு சொல்லி கொடுத்த தளபதி….கடுப்பான சிவாஜி என்ன செஞ்சாரு தெரியுமா?..

இந்தியன் 2 படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதா என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துடன் போட்டிக்கு வந்தால், இந்த ஆண்டு அஜித் மற்றும் விஜய்யின் வாரிசு மற்றும் துணிவு படங்கள் போட்டி போட்டதை விட பிரம்மாண்ட மோதலாக இருக்குமே என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.

கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவிக்கும் என்று தெரிகிறது. மகிழ் திருமேனியின் பிறந்தநாளுக்கு கூட விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம் என அறிவிக்காமல் இந்தியன் 2 டப்பிங் பணிகள் நடக்கும் வீடியோ தான் வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

 

Related Articles

Next Story