Cinema News
17 வயசுலயே அப்பாவிடம் அந்த ஆசையை சொன்ன கமல்!.. காம ராசன் என சும்மாவா சொன்னாங்க!..
லயோலா கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பேசிய சுவாரஸ்யமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது 17 வயதிலேயே தன்னுடைய அப்பாவிடம் கேட்ட அந்த ஆசைப் பற்றியும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
மூன்று வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய பயணம் பிரபாஸின் கல்கி வரை நீண்டு கொண்டே போகிறது. இந்த வயதிலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இண்டஸ்ட்ரி ஹிட் படங்களைக் கொடுப்பதில் அஜித் விஜய்க்கு கடும் போட்டியாக நிலவி வருகின்றனர்.
இதையும் படிங்க: துருவ் விக்ரமை விடாமல் துரத்தும் பாலா!.. பொறந்தநாள் அதுவுமா நிம்மதியா விடமாட்டுறாரே!..
கடந்த ஆண்டு கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 420 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளது. அடுத்து ரிலீசாகப் போகும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள தலைவர் 171 திரைப்படம் கண்டிப்பாக இந்தியன் 2 படத்தின் வசூலை முறியடிக்கும் எனக் கணக்கு போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜித் நிலைமை தான் சியான் விக்ரம் மகனுக்குமா?.. பொறந்தநாளைக்கு போஸ்டர் வருவதோடு சரி!..
சினிமா மட்டுமின்றி, அரசியல், பிக் பாஸ் என அடுத்தடுத்து படு பிசியாக மாறவிருக்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில், லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் அரசியல், சினிமா மற்றும் தனது சொந்த வாழ்க்கை பற்றியும் பேசியுள்ளார்.
தனது அம்மா தன்னை கல்லூரிக்கு போ என்று சொல்லி கேட்காமல் கலை மீதுதான் ஆர்வம் உள்ளது. கல்வி மீது இல்லை என சினிமா பக்கம் ஓடி விட்டேன். அதன் பிறகு சினிமாவை கற்றுக் கொள்ளவே கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை பின்னர்தான் உணர்ந்தேன் என்றார்.
இதையும் படிங்க: அப்படியே எடுத்து கண்ணுல ஒத்திக்கலாம்!.. பளிச் அழகில் மனதை மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…
மேலும், தனது தந்தையிடம் 17 வயதிலேயே எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்று கேட்டேன், 17 வயசுல என்னடா கல்யாணம்னு திட்டினார். நீங்க மட்டும் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளவில்லையா என்று திருப்பி கேட்டேன் எனக்கு கமல் பேசியதும் ஒட்டுமொத்த மாணவர்களும் கரவொலியை எழுப்பினர்.
பின்னர், மாணவர்களின் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார். கமர்சியல் மற்றும் கலை படைப்புகளை கச்சிதமாக உங்களால் மட்டும் எப்படி செய்ய முடிந்தது என்கிற கேள்வியை மாணவர் ஒருவர் முன்வைத்த நிலையில் காமர்ஸ் மற்றும் ஆர்ட்ஸை எப்போதுமே ஒன்றாக பார்க்கக் கூடாது. ஒன்றை விட்டால் தான் இன்னொன்று கிடைக்கும் என்கிற நிலை இப்போது உள்ளது.
ஆனால், 1950களில் வெளியான படங்கள் எல்லாம் கலைப் படைப்பா அல்லது கமர்சியல் படைப்பா என்றே வியக்க வைக்கும். ஏகப்பட்ட முன்னோடிகள் அந்த வித்தையை செய்துள்ளனர் என்று அட்டகாசமாக பதில் அளித்தார்.